பொதுவாகவே மனித உடலில் சில நேரங்களில் அசாதாரணமான மருத்துவ சம்பவங்கள் நிகழ்வது என்பது அறிதல்ல. ஆனால் குஜராத் மாநிலத்தில் நடந்த இந்த சம்பவம் மருத்துவ உடலை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஒரு பெண்ணின் கண்ணிமைகளில் நூற்றுக்கணக்கான பேன்கள் ஒளிந்திருந்தது கண்டறியப்பட்டது. குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த 66 வயது பெண் ஒருவர் தனது கண்களில் கடும் அரிப்பு மற்றும் எரிச்சல் காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவருடைய இரண்டு கண் இமைகளிலும் 250க்கும் மேற்பட்ட பேன்களும் 85 ஈர்களும் இருப்பது கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து பேன்கள் கண்ணுக்கு அருகே இருப்பதால் அவற்றை அகற்றுவது மருத்துவர்களுக்கு மிகவும் சவாலானதாக மாறியது. சிறப்பு மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் அவர்கள் மிகுந்த கவனத்துடன் அவை அனைத்தையும் வெற்றிகரமாக அகற்றினர். இது Phthiriasis Palpebrarum எனப்படும் அரிதான நோயாகும். அந்தப் பெண்ணின் சுகாதார பழக்கங்களில் கவனக்குறைவு காரணமாக இத்தகைய தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தற்போது சிகிச்சைக்கு பிறகு அவர் முழுமையாக குணமடைந்துள்ளாராம். தற்போது இந்த சம்பவம் இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டெலிகிராம் செயலி உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்களுடன் உரையாடவும்…
மும்பையில் கனமழை காரணமாக 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ள நிலையில், பிரஹன்மும்பை மாநகராட்சி ஆணையர் அஸ்வினி பிடே நகரின் நிலைமையைக் கூர்ந்து…
மத்தியப் பிரதேச மாநிலம் சீஹோர் மாவட்ட அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் எனப்படும் கூரையிலிருந்து மழைநீர் கசிந்து ஒழுகும்…
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவர் சக மாணவர்களால் தொடர்ந்து பாலியல்…
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஃபேஸ்புக் தளம் வாயிலாகக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும்…
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட இந்திய மளிகைக் கடை ஒன்றின் திறப்பு விழாவின் போது, தள்ளுபடி விலையில்…