Categories: சினிமா

நடிகர் சூர்யா சினிமாவிற்கு வர காரணமே இந்த நடிகை தான்…! அவங்க அப்பா சம்மதிக்கல… பிரபலம் பகிர்ந்த தகவல்…!!

Spread the love

நடிகர் சூர்யா திரையுலகில் காலடி எடுத்து வைத்ததற்கு இயக்குநர் மணிரத்னம், இயக்குநர் வசந்த் மற்றும் நடிகை சுஹாசினி ஆகியோரின் பங்கு மிக முக்கியமானது என்று இயக்குநர் மணிபாரதி தற்போது ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, சூர்யாவை நடிகராக முதன்முதலில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று எங்களிடம் பரிந்துரைத்தவர் சுஹாசினிதான். அவர், “நடிகர் சிவகுமாருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்; அதில் மூத்த மகன் பார்க்க நன்றாக இருக்கிறார்.

அவரை உங்கள் படத்தில் நடிக்க கேட்டு பாருங்கள்” என்று ஆலோசனை வழங்கினார். அதையடுத்து நானும் இயக்குநர் வசந்தும் சென்று சிவகுமார் அவர்களைச் சந்தித்தோம். எங்கள் கோரிக்கையைக் கேட்ட சிவகுமார் அவர்கள் முதலில் சம்மதிக்கத் தயங்கினார். “சூர்யா இப்போது ஒரு கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றுகிறார். மேலும், சொந்தமாக ஆடைத் தொழிற்சாலை தொடங்குவதற்கு இடம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அவனை சினிமாவில் இழுத்து விட வேண்டாம்” என்று எங்களிடம் தன் தயக்கத்தை வெளிப்படுத்தினார். பிறகு நாங்கள் மணிரத்னம் அவர்களிடம் இந்த விஷயத்தைக் கூறினோம். உடனடியாக அவரே நேரில் சென்று சிவகுமார் அவர்களைச் சந்தித்து, சூர்யா நடிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். மணிரத்னத்தின் தொடர் வலியுறுத்தலுக்குப் பின்னரே, சிவகுமார் இறுதியாக சம்மதம் தெரிவிக்க, சூர்யாவும் சினிமாவிற்கு வந்தார் என்று மணிபாரதி நினைவுகூர்ந்தார்.

Devi Ramu

Recent Posts

6 நிமிடத்தில் 43 அடி… பியூட்டி பார்லரில் அலறிய உரிமையாளர்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் பியூட்டி பார்லர் ஒன்றில், அதன் உரிமையாளர் பவானி…

1 minute ago

“உனக்காக ஒரு கிப்ட் வச்சிருக்கேன்”… காதலனோடு ஹோட்டலில் இருந்த இளம்பெண்… நள்ளிரவில் வந்த வீடியோ கால்… ஹைதராபாத்தில் பதறவைக்கும் பின்னணி…!

ஹைதராபாத்தில் உள்ள லங்கர் ஹவுஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 'வி கிராண்ட்' ஹோட்டல் அறையில், 26 வயது மதிக்கத்தக்க ரேணுகா…

5 minutes ago

நெஞ்சை உலுக்கும் கொடூரம்… 14 ஆண்டு கால தண்ணீர் சண்டை… பழிக்குப்பழியாக தந்தையின் தலை துண்டிப்பு… 5 வயது பிஞ்சு குழந்தை நசுங்கி பலி – அலறும் நெல்லை…!!

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி காளிமுத்து மற்றும் அவரது 5 வயது மகன்…

6 minutes ago

“மீண்டும் எலிக்கறி சாப்பிடும் நிலை”… ஜெயிலுக்கு போகக்கூட நான் ரெடி.. அன்புமணி ராமதாஸ் அதிரடி எச்சரிக்கை… ஜல்லிக்கட்டு பாணியில் வெடிக்கப் போகும் அடுத்த மாபெரும் புரட்சி..!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்த்தும், தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளை…

9 minutes ago

உருகும் ஐரோப்பா… பற்றி எரியும் காடுகள்.. ஐரோப்பாவை உலுக்கும் 40°C கொடுமை… WHO கொடுத்த அதிர்ச்சி எச்சரிக்கை…. உலகையே பயமுறுத்தும் ‘ஒமேகா பிளாக்’….!

ஐரோப்பா முழுவதும் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் கடுமையான வெப்ப அலை நிலவி வருகிறது. பிரான்ஸ், ஸ்பெயின்,…

17 minutes ago

திமுக, அதிமுக, பாஜக ஒன்றாக இணைந்தனர்.. தவெக அரசுக்கு வந்த திடீர் ஆபத்து?… விஜய்க்கு அடுத்த அதிர்ச்சி…. தமிழக அரசியலில் பெரும் திருப்பம்….!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தற்போதைய சூழலில், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சிகளான திமுக,…

22 minutes ago