தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தற்போதைய சூழலில், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் ஒரே நாளில் ஆளுநரிடம் தனித்தனியே புகார் மனுக்களை அளித்துள்ளன. இதில் ஆளுங்கட்சிக்கு பெரும் குடைச்சலாக மாறியுள்ள குதிரை பேர விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு திமுகவும் அதிமுகவும் ஆளுநரைச் சந்தித்து தங்களது கண்டனங்களையும் புகார்களையும் பதிவு செய்துள்ள நிலையில், உயர்கல்வித் துறை அமைச்சர் பள்ளி மாணவி ஒருவரிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்து பாஜக தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தவெக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் களம் இறங்கியுள்ள அதே வேளையில், தங்களது கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்த தொகுதிகளில் தற்போதைக்கு இடைத்தேர்தல் எதையும் நடத்தக் கூடாது என வலியுறுத்தி இந்திய தேர்தல் ஆணையத்தை நாடவும் அதிமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருவது தமிழக அரசியல் களத்தில் அடுத்த கட்ட நகர்வாக உற்றுநோக்கப்படுகிறது.
மும்பையில் கனமழை காரணமாக 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ள நிலையில், பிரஹன்மும்பை மாநகராட்சி ஆணையர் அஸ்வினி பிடே நகரின் நிலைமையைக் கூர்ந்து…
மத்தியப் பிரதேச மாநிலம் சீஹோர் மாவட்ட அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் எனப்படும் கூரையிலிருந்து மழைநீர் கசிந்து ஒழுகும்…
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவர் சக மாணவர்களால் தொடர்ந்து பாலியல்…
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஃபேஸ்புக் தளம் வாயிலாகக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும்…
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட இந்திய மளிகைக் கடை ஒன்றின் திறப்பு விழாவின் போது, தள்ளுபடி விலையில்…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ குடியிருப்பு கட்டிடத்தின் இரண்டாவது பிரிவில் வெள்ளிக்கிழமை அன்று திடீரென பயங்கர தீ…