அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு குறைபாடுகள் என்பது தற்போது மீண்டும் கேள்விக்குறியாகி உள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் அசோக் நகர் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகத்தில் பரவும் அந்த வீடியோவில் ஒன்று மருத்துவமனையின் காத்திருப்பு பகுதியில் இரவில் ஒரு ஆணும் பெண்ணும் போர்வையால் மறைந்து அநாகரிக செயலில் ஈடுபட்ட காட்சி பதிவாகியுள்ளது. மற்றொரு வீடியோவில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பூங்காவில் பகல் வேளையில் ஒரு ஜோடி புதருக்கு பின்னால் ஆபாசமாக நடந்து கொள்வது அம்பலம் ஆகியுள்ளது.
இதற்கு முன்பு இதே மருத்துவமனையில் சிலர் மது அருந்தும் காட்சியும் இணையத்தில் வீடியோவாக வெளியானது. இப்படி தொடர்ந்து சம்பவங்கள் நடைபெற்று வருவது அதிர்ச்சியை அளிக்கிறது. இதனால் உள்ளூர் மக்களும் நோயாளிகளும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பிறகு மருத்துவமனையின் நிர்வாகி தன் நிர்வாகத்தின் தோல்வியை ஒப்புக்கொண்டார். விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மழைக்காலங்களில் மலைப்பாதைகளில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது. அப்படி ஒரு வழுக்கலான மலைச்சரிவுச் சாலையில் கார் ஒன்று மேலே ஏற…
அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷா, தனது 43 வயதிலும் சிங்கிளாகவே கெத்து காட்டி வருகிறார். இவருக்கு எப்போது திருமணம்…
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஐ.டி. பார்க் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வீட்டில் இந்த நூதன…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், அவரது நிச்சயிக்கப்பட்ட மணமகள் சியா கோயலின் ‘ஸ்னாப்சாட்’ குறுஞ்செய்தி இணையத்தில் வெளியாகி…
இயற்கை சீற்றங்களின் போது மனிதர்கள் மட்டுமின்றி, விலங்குகளும் தங்களின் உயிர் பிழைப்புக்காகப் போராடும் காட்சிகள் நெஞ்சை நெகிழ வைப்பவை. சமீபத்தில்…