ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மச்சிலிப்பட்டினத்தைச் சேர்ந்தவர் உஷாராணி. இவர் தன்னுடைய மகன் மற்றும் மகளோடு சேர்ந்து தன்னுடைய கணவர் பிரசாத்தை கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தன்னுடைய மகனும், மகளும் தங்கள் தாய் உஷாராணி உடன் சேர்ந்து பிரசாத்தை தாக்கியுள்ளார்கள். பிறகு அவர் இறந்துவிட்டதாக எண்ணி அவரை ஒரு கிணற்றில் வீசி உள்ளார்கள். பின்னர் உஷாராணி காவல் நிலையத்தில் தன்னுடைய கணவர் இறந்து விட்டதாகவும் உறவினர்கள் தாக்கியதாகவும் புகார் அளித்துவிட்டார்.
ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரசாத் சுய நினைவு வந்ததும் தன்னுடைய மனைவியும், குழந்தைகளும் தான் தன்னை கொல்ல முயன்றதாக காவல்துறையினரிடம் கூறியுள்ளார். இது குறித்த விசாரணையில் உஷாராணி குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். தன்னுடைய கணவர் அடிக்கடி தகராறு செய்து திட்டி பேசுவதாகவும் தாங்க முடியாமல் தான் இந்த முடிவை எடுத்ததாகவும் கூறியிருக்கிறார். மேலும் பிரசாத் நல்ல தூக்கத்தில் இருந்த பொழுது அவருடைய கை, கால்களை கட்டி போட்டு மூன்று பேரும் சேர்ந்து தாக்கியுள்ளார்கள். பிறகு அவரை கிணற்றில் வீசி உள்ளார்கள். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் உஷாராணி மற்றும் அவருடைய மகனை கைது செய்துள்ளார்கள்.
சென்னை கூடுவாஞ்சேரியில் அரங்கேறியுள்ள கொடூரக் கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாதுன் நிஷா (38) என்ற…
தமிழகத்தில் பல தசாப்தகால திராவிடக் கட்சி ஆதிக்கத்தை உடைத்து, எந்தக் கூட்டணியும் இன்றித் தனித்துப் போட்டியிட்டு 35 சதவீத வாக்குகளுடன்…
வீட்டு வேலைகளை வெறும் கடமையாகப் பார்க்காமல், இல்லத்தரசிகளின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் கணவர் தனது மனைவிக்கு மாதந்தோறும் "சம்பளம்" போன்ற…
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய பெருவெள்ள பாதிப்புகளால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், சுமார் 4,000 பேர் காணாமல்…
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே முற்றியுள்ள போர்ப் பதற்றத்தால், உலகளவிலான எரிசக்தி விநியோகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து…
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் இதயத்தை நொறுக்கும் சோகச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. நவநீத் என்ற 4 வயது…