உதயநிதி கோட்டையில் அதிர்ச்சி… “புர்கா அணிந்து கள்ள ஓட்டா?” – திமுக மீது தவெக வேட்பாளர் வைத்த அதிரடி புகார்..!

Spread the love

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் தற்போதே அதிரத் தொடங்கியுள்ளது. இத்தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செல்வம், ஆளுங்கட்சியான திமுக மீது மிகக்கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரியைச் சந்தித்து புகார் அளித்த அவர், திமுகவினர் இத்தொகுதியில் திட்டமிட்டு கள்ள ஓட்டுகளைப் பதிவு செய்ய முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இஸ்லாமியப் பெண்கள் அணியும் புர்கா உடையைப் பயன்படுத்தி, அடையாளத்தை மறைத்து போலி வாக்காளர்களை வாக்களிக்க வைக்க திமுகவினர் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய செல்வம், திமுகவினர் எவ்வித அச்சமுமின்றி வாக்காளர்களுக்கு இலவசப் பொருட்களையும், பணத்தையும் விநியோகித்து வருவதாகக் குற்றம் சாட்டினார். மேலும், தவெக நிர்வாகிகளைப் பணம் கொடுத்து விலைக்கு வாங்க முயற்சிப்பதும், அதற்கு உடன்படாதவர்களை மிரட்டுவதும் தொடர்கதையாகி வருவதாக அவர் ஆதங்கம் தெரிவித்தார். பல இடங்களில் போலி வாக்காளர் அட்டைகளைத் தயார் செய்து வைத்திருப்பதாகவும், வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளைச் சாதகமாகப் பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபட ஆளுங்கட்சித் தரப்பு முனைப்புக் காட்டுவதாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சூழலை எதிர்கொள்ளத் தேர்தல் ஆணையம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்டறிந்து அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்குவதோடு, மத்திய பாதுகாப்புப் படையினரைக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும், வாக்காளர் பட்டியலை முழுமையாக மறு ஆய்வு செய்து முறைகேடுகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியானது காலம் காலமாக திமுகவின் கோட்டையாகவே கருதப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல், தற்போது அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் வரை இத்தொகுதி திமுகவின் அடையாளமாக இருந்து வருகிறது. கடந்த 2021 தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் இமாலய வெற்றியைப் பெற்ற நிலையில், மீண்டும் அதே தொகுதியில் அவர் களம் காண்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிடும் தவெக வேட்பாளர் செல்வம் இத்தகைய அதிரடிப் புகாரை அளித்துள்ளது, இத்தொகுதியில் தேர்தல் போட்டியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இதற்கான தேர்தல் ஆணையத்தின் பதில் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதே இப்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Nanthini

Recent Posts

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

6 minutes ago

பகீர் சிரிப்பு..! ரயில் நிலையத்தில் பயணிக்கு ‘பேன்’ பார்த்த குரங்கு.. வைரலாகும் வினோத வீடியோ..!!

ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டத்திற்கு நடுவே குரங்கு ஒன்று செய்த குறும்புத்தனமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் சிரிப்பலைகளை உருவாக்கி…

18 minutes ago

3 நாள் டைம்..! ஈரான் எல்லையில் அமெரிக்க ராணுவம் குவிப்பு…! 2003 ஈராக் போருக்குப் பின் நடக்கும் மிகப்பெரிய ஸ்கெட்ச்…!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத வகையில் தனது ராணுவ பலத்தைப் பெருக்கி வருகிறது. ஏற்கனவே…

19 minutes ago

பகீர்..! இந்தியா வந்த சரக்கு கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு: ஹார்முஸ் நீரிணையில் அதிரடி சிறைபிடிப்பு..!!

ஹார்முஸ் நீரிணை பகுதியில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு இடையே, இந்தியா மற்றும் இலங்கைக்கு சரக்குகளை ஏற்றி வந்த இரண்டு…

23 minutes ago

ரூ.1 1/2 லட்சம் டிக்கெட் விலை…. ஒரு ஓட்டுக்காக ஸ்காட்லாந்தில் இருந்து கிளம்பிய விஜய் ரசிகை…! வைரல் வீடியோ…!

ஸ்காட்லாந்தில் வசிக்கும் தமிழக இளம்பெண் ஒருவர், தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து தமிழகம்…

26 minutes ago

விஜய்யோட பிள்ளைங்க வந்து “எங்க அப்பா பாத்துக்கலைன்னு குறை சொன்னாங்களா..?” பிரபல ஜோதிடர் ஓபன் டாக்..!!

நடிகர் விஜய் அரசியலில் களம் இறங்கி 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கியதில் இருந்து, அவருக்குப் பல்வேறு சவால்கள்…

26 minutes ago