டிரம்ப் கொடுத்த அதிர்ச்சி அறிவிப்பு.. சில மணி நேரங்களில் ஈரான் செய்த காரியம்…. நடுக்கடலில் சிக்கிய இந்தியக் கப்பல்… உலகையே உலுக்கும் போர் பதற்றம்….!

Spread the love

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கு இன்னும் முழுமையாகக் தணியாத நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரான் நடத்திய அதிரடித் தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஈரான் மீதான போர்நிறுத்தத்தை அதிபர் டிரம்ப் நீட்டிப்பதாக அறிவித்த சில மணி நேரங்களிலேயே இந்தத் தாக்குதல் அரங்கேறியுள்ளது. ஈரான் மீது நேரடி ராணுவத் தாக்குதலைத் தவிர்த்து, பொருளாதார ரீதியாக ஒடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ள நிலையில், ஹார்முஸ் பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஈரான் இத்தகைய எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் மூன்று கப்பல்கள் இலக்கு வைக்கப்பட்ட நிலையில், அதில் பனாமா மற்றும் லைபீரியா நாடுகளைச் சேர்ந்த இரண்டு கன்டெய்னர் கப்பல்களை ஈரான் புரட்சிகர காவல் படை சிறைபிடித்துள்ளது. இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், சிறைபிடிக்கப்பட்ட கப்பல்களில் ஒன்று குஜராத் துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருந்த இந்தியாவிற்குச் சொந்தமான கப்பல் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதவிர, கிரேக்க நிறுவனத்திற்குச் சொந்தமான ‘Euphoria’ என்ற கப்பல் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால், அது தற்போது கடலில் தத்தளித்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் அமெரிக்கக் கடற்படை ஈரானின் இரண்டு கப்பல்களைக் கைப்பற்றியதற்குப் பதிலடியாகவே ஈரான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. “எங்கள் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகையை விலக்கினால் மட்டுமே அமைதிப் பேச்சுவார்த்தை சாத்தியம்” என்று ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஈரானின் இந்த பிடிவாதமான போக்கு மற்றும் அடுத்தடுத்து நடக்கும் கப்பல் கடத்தல் சம்பவங்கள், மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்களைச் சூழச் செய்துள்ளது.

உலகப் பொருளாதாரத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் இந்த அசாதாரண சூழல், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் இந்தியக் கொடி ஏந்திய கப்பல்கள் தாக்கப்பட்ட நிலையில், தற்போது குஜராத் நோக்கி வந்த கப்பல் சிறைபிடிக்கப்பட்டிருப்பது இந்திய வர்த்தக வட்டாரத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதல் ஒரு முடிவுக்கு வராத பட்சத்தில், மத்திய கிழக்கின் அமைதியின்மை இந்தியத் துறைமுகங்களிலும், பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நிதர்சனம்.

Nanthini

Recent Posts

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

5 minutes ago

பகீர் சிரிப்பு..! ரயில் நிலையத்தில் பயணிக்கு ‘பேன்’ பார்த்த குரங்கு.. வைரலாகும் வினோத வீடியோ..!!

ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டத்திற்கு நடுவே குரங்கு ஒன்று செய்த குறும்புத்தனமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் சிரிப்பலைகளை உருவாக்கி…

17 minutes ago

3 நாள் டைம்..! ஈரான் எல்லையில் அமெரிக்க ராணுவம் குவிப்பு…! 2003 ஈராக் போருக்குப் பின் நடக்கும் மிகப்பெரிய ஸ்கெட்ச்…!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத வகையில் தனது ராணுவ பலத்தைப் பெருக்கி வருகிறது. ஏற்கனவே…

18 minutes ago

பகீர்..! இந்தியா வந்த சரக்கு கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு: ஹார்முஸ் நீரிணையில் அதிரடி சிறைபிடிப்பு..!!

ஹார்முஸ் நீரிணை பகுதியில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு இடையே, இந்தியா மற்றும் இலங்கைக்கு சரக்குகளை ஏற்றி வந்த இரண்டு…

22 minutes ago

ரூ.1 1/2 லட்சம் டிக்கெட் விலை…. ஒரு ஓட்டுக்காக ஸ்காட்லாந்தில் இருந்து கிளம்பிய விஜய் ரசிகை…! வைரல் வீடியோ…!

ஸ்காட்லாந்தில் வசிக்கும் தமிழக இளம்பெண் ஒருவர், தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து தமிழகம்…

25 minutes ago

விஜய்யோட பிள்ளைங்க வந்து “எங்க அப்பா பாத்துக்கலைன்னு குறை சொன்னாங்களா..?” பிரபல ஜோதிடர் ஓபன் டாக்..!!

நடிகர் விஜய் அரசியலில் களம் இறங்கி 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கியதில் இருந்து, அவருக்குப் பல்வேறு சவால்கள்…

25 minutes ago