Categories: இந்தியா

நாடு முழுவதும் ரூ.500 ரூபாய் நோட்டுகள் செல்லாதா..? அதிரடி விளக்கம் கொடுத்த மத்திய அரசு..!!

Spread the love

மார்ச் 2026க்குள் 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து திரும்ப பெறப்படும் என்று சமூக வலைதள பக்கத்தில் செய்தி ஒன்று பரவி வரும் நிலையில் இந்த தகவல் முற்றிலும் தவறானது என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மேலும் இது குறித்து மக்கள் யாரும் கவலைப்பட தேவையில்லை என்றும் கூறியுள்ளது.  youtube சேனல் ஒன்றில் சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில் 500 ரூபாய் நோட்டுகள் படிப்படியாக திரும்பப் பெறப்படும் என்று கூறி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த வீடியோ 4.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்ற நிலையில் உண்மை சரிபார்ப்பு துறை இந்த வதந்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்பதை தெளிவுபடுத்தி உள்ளது.

மேலும் ரிசர்வ் வங்கி 500 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவது குறித்து எந்த அறிவிப்பை வெளியிடவில்லை என்றும் இந்த நோட்டுகள் நாடு முழுவதும் சட்டப்பூர்வமாக செல்லுபடி ஆகும் என்று தெரிவித்துள்ளது. சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஒரு சுற்றறிக்கை தான் இந்த வதந்திக்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதாவது அந்த சுற்றறிக்கையில் 100 மற்றும் 200 நோட்டுகளின் புழக்கத்தை ஏடிஎம்கள் மூலம் அதிகரிக்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. எனவே பொதுமக்கள் இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளார்கள்.

Soundarya

Recent Posts

6 நிமிடத்தில் 43 அடி… பியூட்டி பார்லரில் அலறிய உரிமையாளர்… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் பியூட்டி பார்லர் ஒன்றில், அதன் உரிமையாளர் பவானி…

3 minutes ago

“உனக்காக ஒரு கிப்ட் வச்சிருக்கேன்”… காதலனோடு ஹோட்டலில் இருந்த இளம்பெண்… நள்ளிரவில் வந்த வீடியோ கால்… ஹைதராபாத்தில் பதறவைக்கும் பின்னணி…!

ஹைதராபாத்தில் உள்ள லங்கர் ஹவுஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 'வி கிராண்ட்' ஹோட்டல் அறையில், 26 வயது மதிக்கத்தக்க ரேணுகா…

7 minutes ago

நெஞ்சை உலுக்கும் கொடூரம்… 14 ஆண்டு கால தண்ணீர் சண்டை… பழிக்குப்பழியாக தந்தையின் தலை துண்டிப்பு… 5 வயது பிஞ்சு குழந்தை நசுங்கி பலி – அலறும் நெல்லை…!!

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி காளிமுத்து மற்றும் அவரது 5 வயது மகன்…

8 minutes ago

“மீண்டும் எலிக்கறி சாப்பிடும் நிலை”… ஜெயிலுக்கு போகக்கூட நான் ரெடி.. அன்புமணி ராமதாஸ் அதிரடி எச்சரிக்கை… ஜல்லிக்கட்டு பாணியில் வெடிக்கப் போகும் அடுத்த மாபெரும் புரட்சி..!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்த்தும், தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளை…

11 minutes ago

உருகும் ஐரோப்பா… பற்றி எரியும் காடுகள்.. ஐரோப்பாவை உலுக்கும் 40°C கொடுமை… WHO கொடுத்த அதிர்ச்சி எச்சரிக்கை…. உலகையே பயமுறுத்தும் ‘ஒமேகா பிளாக்’….!

ஐரோப்பா முழுவதும் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் கடுமையான வெப்ப அலை நிலவி வருகிறது. பிரான்ஸ், ஸ்பெயின்,…

19 minutes ago