நள்ளிரவில் கணவனின் கை,கால்களை கட்டிப்போட்டு… பிள்ளைகளோடு சேர்ந்து மனைவி செய்த காரியம்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

By Soundarya on ஆனி 7, 2025

Spread the love

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மச்சிலிப்பட்டினத்தைச் சேர்ந்தவர் உஷாராணி. இவர் தன்னுடைய மகன் மற்றும் மகளோடு சேர்ந்து தன்னுடைய கணவர் பிரசாத்தை கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தன்னுடைய மகனும், மகளும் தங்கள் தாய் உஷாராணி உடன் சேர்ந்து  பிரசாத்தை தாக்கியுள்ளார்கள்.  பிறகு அவர் இறந்துவிட்டதாக எண்ணி அவரை ஒரு கிணற்றில் வீசி உள்ளார்கள். பின்னர்  உஷாராணி காவல் நிலையத்தில் தன்னுடைய கணவர் இறந்து விட்டதாகவும் உறவினர்கள் தாக்கியதாகவும் புகார் அளித்துவிட்டார்.

ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரசாத்  சுய நினைவு வந்ததும் தன்னுடைய மனைவியும், குழந்தைகளும் தான் தன்னை கொல்ல முயன்றதாக காவல்துறையினரிடம் கூறியுள்ளார். இது குறித்த விசாரணையில் உஷாராணி குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். தன்னுடைய கணவர்  அடிக்கடி தகராறு செய்து திட்டி பேசுவதாகவும் தாங்க முடியாமல் தான் இந்த முடிவை எடுத்ததாகவும் கூறியிருக்கிறார். மேலும் பிரசாத் நல்ல தூக்கத்தில் இருந்த பொழுது அவருடைய கை, கால்களை கட்டி போட்டு மூன்று பேரும் சேர்ந்து தாக்கியுள்ளார்கள். பிறகு அவரை கிணற்றில் வீசி உள்ளார்கள். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் உஷாராணி மற்றும் அவருடைய மகனை கைது செய்துள்ளார்கள்.