டெல்லியை சேர்ந்தவர் நிலேஷ்(25). இவருடைய காதலன் சதேந்திரா. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே 5 லட்சம் ரூபாய் பரிவர்த்தனை தொடர்பாக மோதல் இருந்ததாக கூறப்படுகிறது .அதாவது சசேந்திரா 5 லட்சம் பணத்தில் கார் வாங்கியுள்ளார். இதனால் அந்த பணத்தை திருப்பி கொடுக்குமாறு நிலேஷ் அடிக்கடி கேட்டு வந்துள்ளார். இதனால் கோபமடைந்த சதேந்திரா மே 28ஆம் தேதி தன்னுடைய ரூமிற்கு அழைத்து சென்று துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.
அதன் பிறகு நிலேஷின் உடலை ஒரு பெரிய சூட்கேஸில் அடைத்து நள்ளிரவில் தன்னுடைய காரில் ஹபூர் அருகே உள்ள ஒரு கால்வாயில் வீசி உள்ளார் .மேலும் அவருடைய செல்போனை உடைத்து பக்கத்தில் உள்ள வடிகாலில் வீசி உள்ளார். இது குறித்த காவல்துறையின் விசாரணையில் அங்குள்ள ஒரு கால்வாயில் கிடைத்த ஒரு சூட்கேசில் பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு சிசிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அந்த பெண் நிலேஷ் என்று அடையாளம் காணபட்டார். இதனையடுத்து நிலேஷின் காதலன் சதேந்திராவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பின்னர் அவர் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் அவரிடம் இருந்து நிலேஷின் ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளார்கள்.
