சூப்பர் குட் நியூஸ்..! மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இவர்களுக்கு முன்னுரிமை..? வெளியான தகவல்..!!

By Soundarya on ஆனி 7, 2025

Spread the love

தமிழகத்தில் கடந்த வருடம் தொடங்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டமானது பல குடும்ப பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. தற்போது சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் இந்த திட்டத்தின் மூலமாக  நிதியுதவி பெற்று வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் மொத்தமாக 2 கோடி 30 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளது. இதில் பல குடும்ப அட்டைதாரர்கள் இந்த நலத்திட்டத்தில் இணைக்கப்படாமல் இன்னும் காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்த திட்டமானது வருகிற ஜூன் மாதம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அப்போது புதிதாக ரேஷன் அட்டை வாங்கிய குடும்பப் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. திமுக அரசின் ஆட்சியில் 18.46 லட்சம் புதிய அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அரசு முன்னுரிமை அளிக்கலாம் எனவும் தெரிகிறது.