தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருப்பவர் நடிகை சமந்தா. தன்னுடைய கடின உழைப்பை போட்டு சினிமாவில் முன்னேறி வந்த இவர் கடந்த சில வருடங்களாக மயோசிடிஸ் என்னும் நோயால் பாதிக்கப்பட்டு படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் நடிப்பில் கடந்த வருடம் சிட்டாடல் வெப் தொடர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

இதனை தொடர்ந்து அடுத்தடுத்து வெப் தொடர்களில் நடித்து வருகிறார். தற்போது நடிப்பை தொடர்ந்து சொந்தமாக தயாரிப்பில் இறங்கி உள்ளார். அந்த வகையில் சுபம் என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த நிலையில் சமந்தா அவருடைய instagram பக்கத்தில் வெளியிட்ட வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .அதாவது அந்த வீடியோவில் NOTHING TO HIDE என்று எழுதியுள்ளது. இதனால் ரசிகர்கள் சமந்தா எதை குறிப்பிடுகிறார்? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
View this post on Instagram
