நாசிக்கில் உள்ள இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் (TCS) கிளையில், பெண் ஊழியர் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் மற்றும் மதமாற்ற முயற்சி விவகாரம் தற்போது நாடு தழுவிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றிய பெண்ணிடம், டீம் லீடர் ரசா மேமன் என்பவர் தவறான முறையில் நடக்க முயன்றதுடன், அவரைப் பின்தொடர்ந்து மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக அந்தப் பெண் மேலதிகாரிகளிடம் முறையிட்டும், அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட பெண்ணையே மிரட்டும் தொனியில் அமைதியாக இருக்கும்படி கூறியது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
இந்த விவகாரத்தில் பயிற்சி மேலாளர் மற்றும் ஹெச்.ஆர் மேலாளர் அஸ்வினி சைனானி ஆகியோரின் அணுகுமுறை கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. “உனக்கு ஏன் தேவையற்ற விளம்பரம்? இந்தப் புகாரை இத்துடன் விட்டுவிடு” என்று கூறி உண்மையை மறைக்க முயன்ற ஹெச்.ஆர் மேலாளர் உட்பட, மொத்தம் 8 பேரை நாசிக் காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். புகாரளித்த பெண்ணைப் பழிவாங்கும் நோக்கில், அவரது பணிச் சூழலைச் சிதைக்க ரசா மேமன் மற்றும் சக ஊழியர்கள் திட்டமிட்டுச் செயல்பட்டதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. குறிப்பாக, 30 வினாடிகளுக்கு ஒருமுறை வரவேண்டிய அழைப்புகளை, வினாடிக்கு ஒன்று என மாற்றி அவருக்குக் கடுமையான பணி அழுத்தத்தையும் மன உளைச்சலையும் கொடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, குற்றஞ்சாட்டப்பட்ட ஊழியர்கள் அனைவரையும் டிசிஎஸ் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள அந்நிறுவனம், பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் தங்களுக்கு ‘ஜீரோ டாலரன்ஸ்’ பாலிசி (Zero Tolerance Policy) இருப்பதாகவும், ஆனால் இந்தப் புகார் முறையான உள்முக விசாரணை அமைப்புகள் (Internal Channels) மூலம் தங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது. நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் இத்தகைய செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
தற்போது நாசிக் காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு, இந்த விவகாரம் தொடர்பாக மொத்தம் 9 வழக்குகளைப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகிறது. ரசா மேமன் தரப்பினர் இது அலுவலகப் போட்டி காரணமாகச் சுமத்தப்பட்ட பொய்ப் புகார் என்று மறுத்தாலும், காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக மேலாளர்கள் செயல்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்த வழக்கில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்பதால், ஐடி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இந்தச் சம்பவம் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…
அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்களும், முன்னணி நிர்வாகிகளும் அடுத்தடுத்து வெளியேறி வரும் சூழலில், கட்சியை வலுப்படுத்த அண்ணாமலையை அதிமுகவிற்குள் கொண்டு வர…
முன்னணி நடிகையாக வலம் வந்த கஸ்தூரி, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சினிமா பிரபலங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில்…
அதிமுகவின் முக்கியப் புள்ளியான சி.வி.சண்முகம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், விழுப்புரம்…
ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்கள் ஆகியவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கானவை என்றாலும், அவை மிக முக்கியமான பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகும். எனவே, அங்கு…
மனிதநேயத்திற்கு நேர்ந்த அவமானம்: தாகத்திற்குத் தண்ணீர் கொடுத்த பெண்ணிடம் அத்துமீறிய பிளிங்கிட் டெலிவரி பாய்! ஆன்லைன் மளிகைப் பொருள் விநியோக…