மனிதநேயத்திற்கு நேர்ந்த அவமானம்: தாகத்திற்குத் தண்ணீர் கொடுத்த பெண்ணிடம் அத்துமீறிய பிளிங்கிட் டெலிவரி பாய்!
ஆன்லைன் மளிகைப் பொருள் விநியோக நிறுவனமான ‘பிளிங்கிட்’ ஊழியர் ஒருவர், வாடிக்கையாளரான இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் ‘சியாஸ்பீக்ஸ்’ என்ற கணக்கைக் கொண்ட அந்தப் பெண், தனக்கு நேர்ந்த இந்த அதிர்ச்சி அனுபவத்தை வீடியோவாகப் பகிர்ந்துள்ளார். “இன்று என்னால் ஒருவனுடைய வேலை பறிபோனது, அவன் அதற்கு முற்றிலும் தகுதியானவன் தான்” என்ற வாசகத்துடன் அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அந்தப் பெண்ணின் விவரிப்பின்படி, யாரோ ஒருவர் அவருக்கு அனுப்பிய பிளிங்கிட் ஆர்டரை டெலிவரி செய்வதற்காக அந்த இளைஞர் அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கோடை வெயிலைக் கருத்தில் கொண்டு, மனிதாபிமான அடிப்படையில் அந்தப் பெண் அந்த டெலிவரி பாய்க்குப் குடிக்கத் தண்ணீர் கொடுத்துள்ளார். ஆனால், தண்ணீரைக் குடித்த அந்த இளைஞரின் புத்தி மாறியுள்ளது. வீட்டின் உள்ளே விநோதமாக நோட்டமிட்ட அவன், “வீட்டில் நீங்கள் தனியாகத்தான் இருக்கிறீர்களா?” என்று கேட்டு அதிர்ச்சியூட்டியுள்ளான்.
https://www.instagram.com/reel/DaNSS51oZsy/?utm_source=ig_web_button_share_sheet
அதோடு நிறுத்தாமல், அந்தப் பெண்ணின் இன்ஸ்டாகிராம் ஐடியைக் கேட்டு, அவரது அனுமதியின்றி மிக நெருக்கமாக வந்து அத்துமீற முயன்றுள்ளான். இதனால் தனக்கு ஆபத்து என்பதை உணர்ந்த அந்தப் பெண், சற்றும் பதற்றமடையாமல் சுதாரித்துக் கொண்டு அவனது கன்னத்தில் பளாரென ஒரு அறை விட்டுள்ளார். பெண்ணின் இந்த அதிரடித் தாக்குதலால் பயந்துபோன அந்த இளைஞர், உடனடியாக அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இந்தக் கொடூரமான அத்துமீறல் குறித்து அந்தப் பெண் உடனடியாக பிளிங்கிட் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்ட பிளிங்கிட் நிறுவனம், உடனடியாக அந்த டெலிவரி பாயை பிளாக் செய்ததோடு, அவன் இனி தங்கள் நிறுவனத்தில் பணியாற்ற முடியாது என்று கூறி வேலையை விட்டு அதிரடியாக நீக்கியுள்ளது. ஆபத்தான சூழலில் பெண்கள் பயந்து நடுங்காமல், எப்படித் தைரியமாகத் தற்காப்பு நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் பலரும் அந்தப் பெண்ணின் துணிச்சலைப் பாராட்டி வருகின்றனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…