ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, தனியாக வசித்து வந்த 60 வயது மூதாட்டி ஒருவரை 23 வயது இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காட்பாடியைச் சேர்ந்த அந்த மூதாட்டி, ஆற்காடு அருகேயுள்ள கிராமம் ஒன்றில் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனியாக வீடு கட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று அதிகாலையில் கஞ்சா போதையில் மூதாட்டியின் வீட்டுக்கு வந்த தக்ஷிணாமூர்த்தி என்ற இளைஞர், கதவைத் தட்டியுள்ளார். மூதாட்டி கதவைத் திறந்தவுடன் அவரது வாயைப் பொத்தி, வீட்டிற்குள் தள்ளிப் பாலியல் பலாத்காரம் செய்ததோடு, இதைப்பற்றி வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டிவிட்டுத் தப்பியோடியுள்ளார்.
இதுகுறித்து ஆற்காடு தாலுகா போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூதாட்டியை மீட்டு வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கனகராஜ் மற்றும் காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி, குற்றவாளியான அத்திதாங்கள் கிராமத்தைச் சேர்ந்த தக்ஷிணாமூர்த்தியைக் கைது செய்தனர். அவர் மீது ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வயது வித்தியாசமின்றி, கஞ்சா போதையால் அரங்கேற்றப்பட்ட இந்த வெறிச்செயல் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், தனியாக வசிக்கும் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் அதிகரித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் பியூட்டி பார்லர் ஒன்றில், அதன் உரிமையாளர் பவானி…
ஹைதராபாத்தில் உள்ள லங்கர் ஹவுஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 'வி கிராண்ட்' ஹோட்டல் அறையில், 26 வயது மதிக்கத்தக்க ரேணுகா…
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி காளிமுத்து மற்றும் அவரது 5 வயது மகன்…
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்த்தும், தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளை…
ஐரோப்பா முழுவதும் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் கடுமையான வெப்ப அலை நிலவி வருகிறது. பிரான்ஸ், ஸ்பெயின்,…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தற்போதைய சூழலில், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சிகளான திமுக,…