கள்ளகாதலியுடன் உல்லாசம்… இடையூறு செய்த உறவினர்.. அடுத்த நொடியே பெட்ரோல் பங்க் வாசலில் நடந்த கொடூரம்….!

Spread the love

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள தேங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 37 வயதுடைய கோபி கிருஷ்ணன். இவருக்கு திருமணமாகி இரண்டு மனைவிகள் இருந்த நிலையில், குடும்ப கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபி கிருஷ்ணன், குட்டலாடம்பட்டி பகுதியை சேர்ந்த தனது உறவினரான 28 வயது மணிகண்டன் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இவர்கள் இருவரும் சென்ட்ரிங் மற்றும் கோழி வெட்டும் கூலித் தொழில்களை ஒன்றாகச் செய்து வந்ததுடன், வேலை முடிந்ததும் தினமும் மது அருந்துவதையும் வழக்கமாக வைத்திருந்தனர்.

இந்நிலையில், கோழி வெட்டும் வேலைக்குச் சென்ற இடத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் மணிகண்டனுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இப்பழக்கம் திருமணத்திற்கு மீறிய கள்ள உறவாக மாறியதை அடுத்து, மணிகண்டன் அந்தப் பெண்ணுடன் அடிக்கடி வெளியில் சென்று தனிமையில் இருந்துள்ளார். மணிகண்டன் தனது கள்ளக்காதலியுடன் தனிமையில் இருக்க வெளியூர்களுக்குச் செல்லும் போதெல்லாம், கோபி கிருஷ்ணனும் அவருடன் கூடவே சென்றுள்ளார். ஆரம்பத்தில் இதனைப் பொறுத்துக் கொண்ட மணிகண்டனுக்கு, நாளடைவில் கோபி கிருஷ்ணனின் வருகை பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவருடன் வேலைக்குச் செல்வதைத் தவிர்த்த போதிலும், கோபி கிருஷ்ணன் தொடர்ந்து கள்ளக்காத ஜோடியைப் பின்தொடர்வதை நிறுத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கோபி கிருஷ்ணனைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்து ஒரு கொடூரமான திட்டத்தைத் தீட்டினார்.

இதன்படி, நேற்று இரவு மணிகண்டனும் கோபி கிருஷ்ணனும் ராசிபுரத்தில் உள்ள ஒரு பாரில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர், தனது கைபேசி தொலைந்துவிட்டதாகக் கூறி, அதுகுறித்து மல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என நம்பவைத்து கோபி கிருஷ்ணனை மணிகண்டன் பேருந்தில் அழைத்துச் சென்றுள்ளார். மல்லூர் சென்றடைந்ததும், அங்கிருந்த ஒரு தனியார் பெட்ரோல் பங்க்கிற்கு இருவரும் நடந்து சென்றுள்ளனர். அங்கு மணிகண்டன் 50 ரூபாய்க்கு ஒரு கேனில் பெட்ரோல் வாங்கியுள்ளார். தொடர்ந்து, கோபி கிருஷ்ணனை அந்த பங்க்கின் நுழைவு வாயில் பகுதிக்கு அழைத்துச் சென்ற மணிகண்டன், யாரும் எதிர்பாராத விதமாக அவர் மீது பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துள்ளார்.

உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில், கோபி கிருஷ்ணன் வலியால் அலறியுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள், உடனடியாக தீயணைப்பான் கருவியைக் கொண்டு தீயை அணைத்து அவரை மீட்டனர். பின்னர், படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த வெண்ணந்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தப்பியோட முயன்ற மணிகண்டனைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது கோபி கிருஷ்ணன் 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கள்ளத்தொடர்பு விவகாரத்தில் நண்பனே பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

8 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

8 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

8 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

8 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

8 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

8 மணத்தியாலங்கள் ago