பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. வகுப்பறையில் இருந்து பள்ளி மாணவர்களை ஆசிரியை ஒருவர் கோபத்துடன் வெளியே தள்ளும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது குழந்தையை பள்ளியில் சேர்க்கச் சென்ற பெற்றோர் ஒருவர், ஆசிரியை பாடம் நடத்தாமல் அலட்சியமாக இருந்ததைக் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெற்றோர் தரப்பில் கூறப்படுவதாவது, அவர் தனது குழந்தையை பள்ளியில் சேர்க்கச் சென்றபோது, வகுப்பறையில் ஆசிரியர்கள் யாரும் பாடம் நடத்தாமல் மாணவர்கள் தனியாக அமர்ந்திருந்ததைக் கண்டுள்ளார். அப்போது அங்குள்ள ஆசிரியை பாடம் கற்பிப்பதற்குப் பதிலாக, அமர்ந்து வெள்ளரிக்காய் சாப்பிட்டுக் கொண்டு பொழுதை கழித்துக் கொண்டிருந்துள்ளார். இதனை அந்தப் பெற்றோர் தனது மொபைல் போனில் வீடியோ எடுக்கத் தொடங்கியதும் ஆத்திரமடைந்த ஆசிரியை, “நான் இவர்களுக்கு பாடம் நடத்த மாட்டேன், இனிமேல் இவர்களை பள்ளிக்கு அழைத்து வராதீர்கள்” என்று கூறி குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளியுள்ளார்.

இந்த முழு சம்பவமும் வீடியோவாகப் பதிவாகி வைரலானதை அடுத்து, கல்வித்துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளனர். இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து சரிபார்க்கும் பணிகள் தொடங்கப்பட்டு, முறையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையில் ஆசிரியை மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

Swetha

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

1 மணத்தியாலம் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

1 மணத்தியாலம் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

1 மணத்தியாலம் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

1 மணத்தியாலம் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

1 மணத்தியாலம் ago

விபத்தா..? அப்படின்னா என்ன..? – மரண பயத்தை காட்டிய.. காரை அசால்ட்டாக நிறுத்திய மாஸ் சிறுவன்…! பாராட்டும் நெட்டிசென்கள்…!

மழைக்காலங்களில் மலைப்பாதைகளில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது. அப்படி ஒரு வழுக்கலான மலைச்சரிவுச் சாலையில் கார் ஒன்று மேலே ஏற…

2 மணத்தியாலங்கள் ago