அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும், தற்போதைய தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகியுமான வைகைச்செல்வன் விமர்சித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, பாஜகவின் மூத்த தலைவர் வாஜ்பாயைக் குறித்து ‘சரியான மனிதர், தவறான கட்சியில் இருக்கிறார்’ என்று முன்பு குறிப்பிட்டதைச் சற்று மாற்றி, இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன் இக்கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
தவெகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவிலிருந்து தாங்கள் விலக வேண்டிய கட்டாயச் சூழலுக்குத் தள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டார். எடப்பாடி பழனிசாமி குறித்துத் தனிப்பட்ட முறையில் குறை சொல்ல தனக்கு விருப்பமில்லை என்று தெரிவித்த அவர், அதிமுக என்ற இயக்கம் மிகச் சிறப்பானது என்றாலும், அதை வழிநடத்தும் தலைமை இபிஎஸ் தவறானதாக அமைந்துவிட்டது என்பதை இந்த ஒற்றை ஆங்கில வாசகத்தின் மூலம் அரசியல் வட்டாரத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
மழைக்காலங்களில் மலைப்பாதைகளில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது. அப்படி ஒரு வழுக்கலான மலைச்சரிவுச் சாலையில் கார் ஒன்று மேலே ஏற…