திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகேயுள்ள கேதாண்டப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களைக் கொண்டு கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில், செந்தில் என்பவர் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். பள்ளியிலுள்ள கழிவறை நிரம்பி வழிந்ததால், அதிலிருந்து வெளியேறும் கழிவுநீரை அப்புறப்படுத்த மாணவர்களைக் கொண்டே பள்ளம் தோண்ட வைத்துள்ளார். இதனைக்கண்ட சமூக ஆர்வலர் ஒருவர் மாணவர்களிடம் விசாரித்தபோது, “வேலையாட்கள் வராததால் தலைமை ஆசிரியர் எங்களை இப்போதும், இதற்கு முன்பும் இதுபோன்று கழிவறை அடைப்புகளைச் சரிசெய்யச் சொன்னார்” என்று அவர்கள் இயல்பாகக் கூறும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பள்ளிக்கூடம் என்பது அறிவு புகட்டும் தேவாலயமாக இருக்க வேண்டுமே தவிர, மாணவர்களைக் கொண்டு இதுபோன்ற சுகாதாரமற்ற தூய்மைப் பணிகளைச் செய்யும் இடமாக மாறக்கூடாது எனப் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். மாணவர்களின் கல்வி மற்றும் உடல் நலனைப் பொருட்படுத்தாமல், அவர்களைக் கடின உழைப்பிலும் கழிப்பறை தூய்மைப் பணியிலும் ஈடுபடுத்திய பள்ளித் தலைமை ஆசிரியர் மீது உடனடியாகக் கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் பெற்றோர் ஆசிரியர் கழகமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆபாசமாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த…
இபிஎஸ் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் முதியவர்கள், தங்களுக்கு வரும் மாதாந்திர ஓய்வூதியம் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து கிடைக்க ஒவ்வொரு…
குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் பிரீதி காஷ்யப், தனது 40-வது வயதிலேயே எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம் மருத்துவ…
இந்தியாவில் சர்க்கரையின் மொத்த விற்பனை விலை இதுவரை இல்லாத அளவிற்குக் கடுமையான உச்சத்தை எட்டியுள்ளது. வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் இனிப்புத்…
தெலுங்கானா மாநிலம் லிங்கம்பள்ளி பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அருணா என்ற பெண்ணும் சிரவன் என்பவரும் முதன்முறையாகச் சந்தித்துப் பழகியுள்ளனர்.…
ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி நெஞ்சை பதறவைக்கும் கும்பல் தாக்குதல் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.…