தமிழக சட்டசபையில் தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 5 அன்று நிதிநிலை அறிக்கையும், ஆகஸ்ட் 6 அன்று வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று தொடங்கியது. சட்டசபை கூடியதும், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதில் தீவிரம்காட்டி வருவது குறித்து எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மேகதாது விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி தவெக அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும், குறுவை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமும், முழு பயிர்க்கடன் தள்ளுபடியும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளிக்க அழைக்கப்பட்டபோது, முதல்வர் விஜய் நேரடியாக குறுக்கிட்டுப் பேசத் தொடங்கினார். காவிரி பிரச்சனை உணர்வுப்பூர்வமானது என்றும், அதில் அரசியல் செய்யத் தங்களுக்கு விருப்பமில்லை என்றும் அவர் கூறினார். மேகதாது தொடர்பான தீர்மானத்தின் நகலை பிரதமரிடம் நேரில் வழங்கியிருப்பதாகவும், பக்கத்து மாநிலத்துடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதே சரியான அணுகுமுறை என்றும் தெரிவித்த விஜய், கடந்த காலத்தில் 1969-ல் நீர்வளத் துறை அமைச்சராக இருந்தவர் அனுமதி அளித்த வரலாற்றுத் தவறுகளைப் பேசி ‘அழுக்கு அரசியல்’ செய்ய விரும்பவில்லை என்றார்.
தொடர்ந்து விவசாயிகள் நிவாரணம் குறித்துப் பேசிய முதல்வர் விஜய், விவசாயிகளுக்கான நிவாரண உதவிகள் ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்டார். மேலும், “தினமும் முன்னபின்ன பேப்பர் படித்திருந்தால்தானே நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரியவரும்” என்று எதிர்க்கட்சித் தலைவரை நோக்கிப் பேசியது அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய்யின் இந்த விமர்சனத்திற்கு எதிர்க்கட்சித் தரப்பிலிருந்து உடனடி எதிர்ப்பு உருவானது.
இதற்குப் பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின், “குறுவை சாகுபடி தொடர்பாக அரசு வழங்கியது ‘சிறப்புத் தொகுப்பு’; ஆனால் விவசாயிகள் கேட்பது ‘வறட்சி நிவாரணம்’. இரண்டிற்கும் இடையே நிறைய வித்தியாசம் உள்ளது. தினமும் பேப்பர் படித்தால் மட்டும் போதாது, மற்றவர்கள் சொல்வதையும் காது கொடுத்துக் கேட்க வேண்டும்” என்று காரசாரமாகத் திருப்பியளித்தார். இருப்பினும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்டவில்லை என்ற கேள்வியை உதயநிதி தொடர்ந்து எழுப்பியபோதும், அதற்கு முதல்வர் விஜய் பதிலளிக்காமல் தவிர்த்தது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானா மாநிலம் நாராயணபேட்டை மாவட்டத்தில் உள்ள எக்னாஸ்பூர் அரசுப் பள்ளியில் பெரும் சோகச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அங்குள்ள வகுப்பறை…
வீதியின் ஓரத்தில் சுயநினைவற்று கிடக்கும் தன் தாயை எழுப்பத் துடிக்கும் அந்தப் பிஞ்சுக் குழந்தையின் அழுகை, காண்போர் நெஞ்சை உலுக்குவதாக…
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் ரசூல்பாத் பகுதியில் உள்ள நேரு நகரில், தனது வீட்டின் வெளிப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு…
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னம்குளம் அருகே உள்ள பறையம்பாலம் பகுதியில் வியாழக்கிழமை மதியம் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து…
தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் தண்டூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பிரபலமான நகைக்கடையில் 5 பேர் கொண்ட கும்பல்…
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், பிசிஏ முதலாண்டு படித்து வந்த ஸ்மிருதி பாண்டே என்ற 17 வயது கல்லூரி மாணவி, தனது…