தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் தண்டூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பிரபலமான நகைக்கடையில் 5 பேர் கொண்ட கும்பல் துணிச்சலான திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. 3 பெண்கள், ஒரு ஆண் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் அடங்கிய இந்தச் சிறு கும்பல், நகை வாங்குவதற்காக வந்த வாடிக்கையாளர்களைப் போலக் கடைக்குள் நுழைந்துள்ளனர். ஊழியர்களின் கவனத்தைத் தந்திரமாகத் திசைதிருப்பி, அங்கிருந்த 10 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலியை நைஸாகச் சுருட்டிக் கொண்டு யாருக்கும் சந்தேகம் வராத வகையில் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
நகை காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த கும்பலின் கைவரிசை அப்பட்டமாக அம்பலமானது. இச்சம்பவம் குறித்து அளித்த புகாரின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் உதவியோடு தப்பியோடிய பெண் கும்பல் உள்ளிட்ட 5 பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஆபாசமாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த…
இபிஎஸ் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் முதியவர்கள், தங்களுக்கு வரும் மாதாந்திர ஓய்வூதியம் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து கிடைக்க ஒவ்வொரு…
குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் பிரீதி காஷ்யப், தனது 40-வது வயதிலேயே எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம் மருத்துவ…
இந்தியாவில் சர்க்கரையின் மொத்த விற்பனை விலை இதுவரை இல்லாத அளவிற்குக் கடுமையான உச்சத்தை எட்டியுள்ளது. வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் இனிப்புத்…
தெலுங்கானா மாநிலம் லிங்கம்பள்ளி பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அருணா என்ற பெண்ணும் சிரவன் என்பவரும் முதன்முறையாகச் சந்தித்துப் பழகியுள்ளனர்.…
ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி நெஞ்சை பதறவைக்கும் கும்பல் தாக்குதல் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.…