வரலாறு காணாத உச்சத்தில் சர்க்கரை விலை… சாமானியர்களுக்கு காத்திருக்கும் பெரும் அதிர்ச்சி… அடுத்த 3 மாதங்களுக்கு நீடிக்கும் என வல்லுநர்கள் எச்சரிக்கை…!!

Spread the love

இந்தியாவில் சர்க்கரையின் மொத்த விற்பனை விலை இதுவரை இல்லாத அளவிற்குக் கடுமையான உச்சத்தை எட்டியுள்ளது. வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் இனிப்புத் தேவைகள் பலமடங்கு அதிகரிக்கும் என்பதால், இந்த திடீர் விலை உயர்வு சாமானிய மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலைமை தற்காலிகமானது அல்ல என்றும், அடுத்த மூன்று மாதங்களுக்குச் சர்க்கரை விலை இதே உச்ச நிலையில்தான் நீடிக்கும் என்றும் சந்தை வல்லுநர்கள் மற்றும் டெல்லி வர்த்தக அமைப்புகள் எச்சரித்துள்ளன.

இந்த வரலாறு காணாத விலை ஏற்றத்திற்கு உள்நாட்டு உற்பத்திக் குறைவு மற்றும் ஏற்றுமதியால் ஏற்பட்ட கையிருப்புச் சரிவு ஆகியவையே முக்கியக் காரணங்களாகும். உள்நாட்டில் சர்க்கரை உற்பத்தி வழக்கமான தேவையை விடக் குறைந்திருக்கும் சூழ்நிலையிலும், சுமார் 8 லட்சம் டன் சர்க்கரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மேலும், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி போன்ற தொடர் பண்டிகைகளைக் கருத்தில் கொண்டு, சர்க்கரை ஆலைகள் அதிக லாபம் ஈட்டும் நோக்கில் தங்களிடமுள்ள இருப்பை மொத்தமாகச் சந்தைக்குக் கொண்டு வராமல் செயற்கையாகக் கட்டுப்படுத்திச் சிறுகச் சிறுக விநியோகம் செய்து வருகின்றன.

சர்க்கரை உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் மகாராஷ்டிராவின் கோலாப்பூர் சந்தையில் இதன் தாக்கம் மிகத் தீவிரமாக உணரப்பட்டுள்ளது. அங்கு கடந்த ஒரே மாதத்தில் 100 கிலோ சர்க்கரையின் விலை 10.20 சதவீதம் அதிகரித்து 4,716 ரூபாய் என்ற புதிய உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. உற்பத்தித் தட்டுப்பாடு, ஏற்றுமதி மற்றும் ஆலைகளின் விநியோகக் கட்டுப்பாடு ஆகியவை ஒன்றிணைந்து சில்லறை விற்பனைச் சந்தையிலும் கடுமையான விலையேற்றத்தை உருவாக்கி, வரப்போகும் பண்டிகைக் காலங்களில் பொதுமக்களின் தலையில் பெரும் சுமையை ஏற்படுத்தப் போகின்றன.

Gayathri

Recent Posts

எம்பிக்களை கைக்குள் போட பிளான்?…. விஜய் கூட்டிய கூட்டத்துக்கு பின்னால் இப்படி திட்டம் இருக்கா?….. கிழித்து தொங்கவிட்ட தராசு ஷ்யாம்….!

மேகதாது மற்றும் காவிரி நீர் விவகாரத்தில் சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை மட்டுமே காரணமாகக் காட்டி, விவசாய அமைப்புகளையும் அனைத்துக்…

49 seconds ago

“திடீரென வெடித்த ஏசி இயந்திரம்…” வீடு பற்றி எரிந்து பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்…! தப்பித்த குடும்பத்தினர்… திக் திக் வீடியோ வைரல்…!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த முகமது ரன்வீர் என்பவரது வீட்டில், குளிர்சாதன இயந்திரம் திடீரென வெடித்துப் பயங்கரத் தீ…

3 minutes ago

இந்தியாவுக்கு ட்ரம்ப் வைத்த மாபெரும் செக்… 100% வரி விதிக்க அமெரிக்க செனட் ஒப்புதல்… பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்….!

அமெரிக்க செனட் சபை, ரஷ்யாவையும் அந்நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயுவைக் கொள்முதல் செய்யும் நாடுகளையும் குறிவைக்கும் புதிய தடைகள் சட்ட…

9 minutes ago

உனக்கு குழந்தை பெத்துக்க மட்டும் தான் தெரியுமா…? “கர்ப்பிணி பெண்ணை ஆபாசமாக திட்டி…” தட்டி கேட்ட கணவருக்கு அடி உதை…. கொந்தளிக்க வைக்கும் வீடியோ வைரல்…!!!

அரசு மருத்துவமனை ஒன்றிற்குப் பிரசவத்திற்காக வந்த கர்ப்பிணிப் பெண்ணை, அங்குள்ள மருத்துவர்கள் மிகவும் ஆபாசமாகவும் இழிவாகவும் பேசிய சம்பவம் பெரும்…

20 minutes ago

இப்படியா சாவு வரணும்?…. அக்கா, தங்கையை பலி கொண்ட கொண்டைக்கடலை…. கதவை திறந்து பார்த்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாலாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மல்லேஷ் தேபேகர், தான் அறுவடை செய்த கொண்டைக்கடலையை வீட்டில் உள்ள…

23 minutes ago

“பங்களாவிற்குள் எலும்புக்கூடு…” பெங்களூரில் ஓராண்டாக யாருக்கும் தெரியாமல் நடந்த சோகம்…! கணவர், மகன் இல்லாமல் வாட்டிய கொடுமை…. பகீர் சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் பகலகுண்டே பகுதிக்கு உட்பட்ட ஹவாநூர் லே-அவுட்டில் உள்ள ஒரு மாடி வீட்டில், தாட்சாயிணி (52) என்ற…

28 minutes ago