“மின்னல் வேகம்… அலறிய பயணிகள்…” 5 வாகனங்கள் மீது மோதி சீறிப்பாய்ந்த தனியார் பேருந்து… 2 பேர் துடிதுடித்து பலி…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

Spread the love

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னம்குளம் அருகே உள்ள பறையம்பாலம் பகுதியில் வியாழக்கிழமை மதியம் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கோர விபத்துக்குள்ளானது. கோழிக்கோட்டிலிருந்து திருச்சூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து, எதிரே வந்த கார், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் என அடுத்தடுத்து 5 வாகனங்கள் மீது பலமாக மோதியுள்ளது. வாகனங்களைத் தள்ளிச் சென்ற பேருந்து, இறுதியாக ஒரு வீட்டின் எல்லைச் சுவரை இடித்துத் தள்ளி வீட்டுக் முற்றத்திற்குள் புகுந்து நின்றது.

இந்த கொடூர விபத்தில் காரில் பயணித்த ரியா ஃபாத்திமா என்ற மாணவி உட்பட இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 24 பேரில் 9 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உடனடியாக விரைந்து வந்த உள்ளூர் மக்களும் மீட்புக் குழுவினரும் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்த நிலையில், ஓட்டுநரின் அதிவேகக் கட்டுப்பாடற்ற இயங்குதலே விபத்திற்குக் காரணமா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

BREAKING: முன்னாள் அமைச்சர் பொன்முடி கைது விவகாரம்…! நீதிமன்றத்தின் அதிரடி முடிவு…!!

ஆபாசமாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த…

9 minutes ago

நடமாட முடியாத முதியவரா நீங்கள்?… வீட்டு வாசலிலேயே இலவச சேவை… ஓய்வூதியதாரர்களுக்கு இன்ப அதிர்ச்சி… EPFO கொண்டுவந்த சூப்பர் திட்டம்…!!

இபிஎஸ் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் முதியவர்கள், தங்களுக்கு வரும் மாதாந்திர ஓய்வூதியம் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து கிடைக்க ஒவ்வொரு…

9 minutes ago

“ஈடு செய்ய முடியாத இழப்பு…” இரண்டு சிறு குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற டாக்டர் பிரீதி காஷ்யப்… திடீர் மறைவால் அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் பிரீதி காஷ்யப், தனது 40-வது வயதிலேயே எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம் மருத்துவ…

15 minutes ago

வரலாறு காணாத உச்சத்தில் சர்க்கரை விலை… சாமானியர்களுக்கு காத்திருக்கும் பெரும் அதிர்ச்சி… அடுத்த 3 மாதங்களுக்கு நீடிக்கும் என வல்லுநர்கள் எச்சரிக்கை…!!

இந்தியாவில் சர்க்கரையின் மொத்த விற்பனை விலை இதுவரை இல்லாத அளவிற்குக் கடுமையான உச்சத்தை எட்டியுள்ளது. வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் இனிப்புத்…

26 minutes ago

என் வாழ்க்கைக்கு என்ன பதில்…? காதலன் வீட்டு வாசலில் 7 மாத கர்ப்பிணி… ஹால்பிடலில் தொடங்கிய காதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் லிங்கம்பள்ளி பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அருணா என்ற பெண்ணும் சிரவன் என்பவரும் முதன்முறையாகச் சந்தித்துப் பழகியுள்ளனர்.…

26 minutes ago

“விட்ருங்க அங்கிள்… துடித்த 15 வயது சிறுமி…” தரதரவென இழுத்து வந்து மரத்தில் கட்டி வைத்த கும்பல்… தர்ம ஆடி கொடுத்த மக்கள்…. வைரலாகும் வீடியோ…!!

ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி நெஞ்சை பதறவைக்கும் கும்பல் தாக்குதல் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.…

40 minutes ago