“மீன் குழம்பு ருசியாக இல்லை!”.. கணவன் சொன்ன ஒரே வார்த்தை.. 4 மாத கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!

Spread the love

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள களிமேடு பகுதியில், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த திலக்நாயக் மற்றும் அவரது மனைவி மாதுரி விஸ்வகர்மா ஆகிய தம்பதியினர் விவசாயி நவலடி நாச்சியப்பனின் தோட்டத்தில் தங்கி பட்டுக்கூடு வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களில், மாதுரி விஸ்வகர்மா தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்றுமுன்தினம் மதியம் சாப்பிட்டுக் கொண்டிருந்த திலக்நாயக், மீன் குழம்பு ஏன் ருசியாக இல்லை என்று கூறி தனது மனைவியைக் கடுமையாகத் திட்டிவிட்டுச் சென்றுள்ளார்.

இதனால் மனமுடைந்த மாதுரி விஸ்வகர்மா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவு வேலை முடிந்து திரும்பிய திலக்நாயக், மனைவி பிணமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், கணவர் திட்டியதால் கர்ப்பிணிப் பெண் தற்கொலை செய்து கொண்ட விபரீதம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

8 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

8 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

8 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

8 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

8 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

8 மணத்தியாலங்கள் ago