திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே கடந்த பத்து ஆண்டுகளாக மந்தகதியில் நடைபெற்று வரும் உயர்மட்ட மேம்பாலப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கவிதா நேரில் சென்று ஆய்வு செய்தார். நீண்ட காலமாக ஆமை வேகத்தில் நகரும் இந்த பாலப் பணியால் அப்பகுதி மக்கள் அன்றாடம் கடுமையான போக்குவரத்து நெரிசலையும், சொல்லொணாத் துயரங்களையும் சந்தித்து வருகின்றனர். ஆட்சியரின் வருகையை அறிந்த பொதுமக்கள், பணிகளை உடனடியாக முடிக்க வலியுறுத்தி அவரை முற்றுகையிட்டு காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்த இடமே சற்று நேரம் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.
இந்த ஆய்வின் போது, அந்த வழியே வந்த மாநகரப் பேருந்தில் இருந்து இறங்கி ஓடிவந்த நடத்துனர் ஒருவர், மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்கத் தன் ஆதங்கத்தைக் கொட்டினார். “கடந்த 5 வருடங்களாக வெறும் 4 பணியாளர்களை வைத்துக்கொண்டு வேலையை முடிக்காமல் ஏமாற்றி வருகிறார்கள்; தயவுசெய்து உங்கள் நிர்வாகமும் ‘shooting’ நடத்தும் ஆட்சியாக மாறிவிட வேண்டாம்” என்று உருக்கமாகக் கேட்டுக்கொண்டார். மேலும், மேம்பாலப் பணி சுணக்கத்தால் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பேருந்தில் பயணிப்பவர்கள் தங்களை மிகக் கேவலமாகப் பேசுவதாகவும், அதைத் தன் காதுகளால் கேட்கவே முடியவில்லை என்றும், தேவைப்பட்டால் காலில் விழவும் தயார் என்றும் கூறி, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு ஆட்சியரிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…