தென்காசி மாவட்டம் ஊர்மேழகியான் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி (46) செங்கோட்டை நீதிமன்ற வழக்கறிஞர். தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளராகவும் இருந்தார். இந்நிலையில் தென்காசி கூலக்கடை பஜாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்தபோது பட்டப் பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து தென்காசி போலீஸ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் அதே பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் என்பவரது மனைவிக்கும் முத்துக்குமாரசாமிக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இந்த சூழலில் உடல் நலமின்றி இருந்த சிவசுப்ரமணியத்தின் மகள் திடீரென இறந்து விட்டார். இந்த சூழலில் சிவசுப்பிரமணியனின் மனைவியை வக்கீல் முத்துக்குமாரசாமி உறவுக்கு அழைத்து டார்ச்சர் செய்துள்ளார்.
நான் என் மகளை பறிகொடுத்து விட்டு வேதனையில் இருக்கிறேன். என்னை விட்டுவிடுங்கள் என்று அவர் மறுத்துள்ளார். ஆனால் முத்துக்குமாரசாமி தொடர்ந்து அவரை வருமாறு டார்ச்சர் செய்திருக்கிறார். இதுகுறித்து தனது கணவர் சிவசுப்பிரமணியத்திடம் கூறி மனைவி அழுதிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சிவசுப்பிரமணியன், அரிவாளை எடுத்துச்சென்று வக்கீல் முத்துக்குமாரசாமியை வெட்டி கொலை செய்து விட்டு கேரளாவிற்கு தப்பியோடி தலைமறைவாகிவிட்டார். தென்காசி போலீசார் கேரளாவில் தலைமறைவாகி உள்ள சிவசுப்பிரமணியத்தை தேடி வருகின்றனர்.
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல்…
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 39 நாட்களாக…
தமிழகம் முழுவதும் இன்று சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 6…
தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பரச்சேரி கிராம…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான அணுஆயுத விவகாரத்தில் நிலவி வந்த போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது புதிய திருப்பத்தை…
இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் சட்டசபை தேர்தல்கள் நிறைவடைந்தவுடன், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.25 முதல் ரூ.28…