அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான அணுஆயுத விவகாரத்தில் நிலவி வந்த போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. ஈரானின் அணுஆயுத தயாரிப்பு முயற்சியை தடுக்கும் நோக்கில் இருநாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் சிக்கல் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் நிறுத்தத்தை மேலும் சில நாட்களுக்கு நீட்டிப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவ தளபதி மற்றும் பிரதமரின் கோரிக்கையை ஏற்று, ஈரான் தனது ஒருங்கிணைந்த திட்டத்தை முன்வைக்கும் வரை இந்த கால அவகாசம் வழங்கப்படுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் தோல்வியடைந்த நிலையில், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஏற்கனவே விதிக்கப்பட்ட போர் நிறுத்தக் கெடு முடிவடைந்ததால், ஈரான் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் அந்நாட்டின் மீது குண்டு வீசப்படும் என்று டிரம்ப் முன்னர் எச்சரித்திருந்தார். இருப்பினும், தற்போது தனது நிலைப்பாட்டில் இருந்து சற்று பின்வாங்கியுள்ள அவர், ஈரானின் உள்நாட்டு அரசியல் பிளவுகளை சுட்டிக்காட்டி, அந்நாடு ஒரு திட்டத்துடன் வரும் வரை காத்திருக்க அமெரிக்க ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் தீவிர முயற்சியால் அடுத்த 36 முதல் 72 மணி நேரத்திற்குள் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், “பேச்சுவார்த்தை சாத்தியம்தான், வெள்ளிக்கிழமைக்குள் (நாளை) இது தொடர்பாக ஒரு நல்ல செய்தி வரும்” என்று நம்பிக்கை தெரிவித்தார். டிரம்ப் எப்படியாவது ஈரானை பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வந்து, தனது நிபந்தனைகளுக்கு பணிய வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதை இந்த அறிவிப்பு காட்டுகிறது.
ஆனால், டிரம்பின் இந்த அறிவிப்பை ஈரான் முற்றிலுமாக மறுத்துள்ளது. ஈரானின் அரசு சார்பு செய்தி நிறுவனமான தஸ்னிம் நியூஸ், “அதிபர் டிரம்ப் பொய் சொல்கிறார்; வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஈரான் எந்த முடிவும் எடுக்கவில்லை” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளது. ஈரானின் இந்த பிடிவாதமான போக்கும், டிரம்பின் போர் நிறுத்த நீட்டிப்பும் சர்வதேச அரசியலில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளும் விட்டுக்கொடுக்காத நிலையில், மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன.
தற்கால டிஜிட்டல் உலகில் நீண்ட நேரம் அலைபேசி மற்றும் மடிக்கணினிகளைத் குனிந்து பார்ப்பதால் ஏற்படும் கழுத்து வலி, சாதாரணமான ஒன்றாகத்…
ஜோதிட சாஸ்திரப்படி வரும் மே 6, 2026 அன்று, புளூட்டோ கிரகம் (யமன்) தனது பாதையில் பின்னோக்கி நகரும் வக்ர…
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல்…
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 39 நாட்களாக…
தமிழகம் முழுவதும் இன்று சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 6…
தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பரச்சேரி கிராம…