Categories: அரசியல்

திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து ஆவேசமாக தன் கருத்தை பதிவிட்ட ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண்!

Spread the love

திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, கார்த்திகை மாதத்தில் மலையில் விளக்கு ஏற்றுவது பண்டைய கால இந்து பாரம்பரியம். இன்று இந்தியாவில் உள்ள இந்துக்கள் தங்கள் நம்பிக்கை மற்றும் மரபுகளை பின்பற்ற நீதிமன்றங்களை நாட வேண்டியிருப்பது துரதிஷ்டவசமானது. ஒரு தீர்க்கமான சட்ட போராட்டத்தில் வெற்றி பெற்ற பிறகும் பக்தர்கள் தங்கள் சொந்த செலவில் ஒரு சிறிய அமைதியான சடங்கை கூட செய்ய முடியாவிட்டால் இந்த நாட்டில் அவர்களுக்கு அரசியல் அமைப்பு நீதி எங்கே கிடைக்கும்?

உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். எந்த மத விழாவையும் ஒரு வாரம் தாமதமாக கொண்டாட முடியுமா? ஒரு புனித நாள் நாளை கொண்டாடுவதை வேறொரு நேரத்துக்கு மாற்ற முடியுமா? ஆனால் இந்த புனிதமான கார்த்திகை தீபம் தருணம் திருடப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் கோயில்களையும் மத விவகாரங்களையும் நிர்வகிக்க சனாதன தர்ம ரக்சா வாரியம் நமக்கு தேவை. இந்து மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களை கேலி செய்வது சில குழுக்களுக்கு வழக்கமாகி விட்டது. மற்ற மத நிகழ்வுகளின் விஷயங்களிலும் அவர்களால் இதை செய்யத் துணிய முடியுமா?

இந்துக்கள் ஜாதி பிராந்தியம் மற்றும் மொழித் தடைகளால் பிரிக்கப்பட்டு இருக்கும் வரை இந்து மதமும் அதன் நடைமுறைகளும் தொடர்ந்து கேலி செய்யப்பட்டு அவமதிக்கப்பட்டு கொண்டே இருக்கும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காமாக்யா முதல் துவாரகா வரை ஒவ்வொரு இந்துவும் தங்கள் சொந்த மண்ணில் இந்துக்கள் எதிர்கொள்ளும் அவமானங்கள் குறித்து விழித்துக் கொள்ளும் நாள் வரும் என்று நம்புகிறேன், என்று அந்த பதிவில் பவன் கல்யாண் கூறியிருக்கிறார்.

Elango

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

6 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

6 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

6 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

6 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

6 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

6 மணத்தியாலங்கள் ago