துரோகத்தின் உச்சம்.! 48 மணி நேரம்… 2 சீரழிப்பு… ஒரு கொடூரக் கொலை.. டெல்லியை உறைய வைத்த ‘சைக்கோ’ வேலைக்காரன்..!!

Spread the love

தெற்கு டெல்லியின் ஈஸ்ட் ஆஃப் கைலாஷ் பகுதியில் வசித்து வந்த ஓய்வுபெற்ற வருமான வரித்துறை அதிகாரியின் 45 வயது மகள், தனது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இக்கொலையைச் செய்தது அந்த வீட்டில் முன்பு வேலை பார்த்த ராஜு மற்றும் அவனது கூட்டாளியான அஜய் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கொள்ளையடிக்கும் நோக்கில் வீட்டிற்குள் நுழைந்த இவர்கள், அந்தப் பெண்ணைக் கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு, வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்தைச் சுருட்டிக் கொண்டு தப்பியோடியுள்ளனர்

இந்தக் கொலையாளிகளின் அட்டகாசம் டெல்லியுடன் நிற்கவில்லை. இவர்கள் டெல்லிக்கு வருவதற்கு முன்பே ராஜஸ்தானின் ஆழ்வார் (Alwar) பகுதியில் ஒரு பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். அங்கிருந்து தப்பி டெல்லி வந்த இவர்கள், ஐ.ஆர்.எஸ் அதிகாரியின் மகளைக் கொலை செய்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே, மற்றொரு பெண்ணைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சித் தகவலும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. வெறும் 48 மணி நேர இடைவெளியில் இரண்டு பாலியல் வன்கொடுமைகள் மற்றும் ஒரு கொலையை இவர்கள் அரங்கேற்றியுள்ளனர்.

முன்னாள் வேலைக்காரன் என்பதால் வீட்டின் பாதுகாப்பு ஓட்டைகளை நன்கு அறிந்திருந்த ராஜு, திட்டமிட்டு இந்தச் செயலைச் செய்துள்ளான். தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் போலீசார் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். கைதேர்ந்த குற்றவாளிகளைப் போலத் தொடர்ந்து கொடூரச் செயல்களில் ஈடுபட்டு வந்த இவர்களின் பின்னணி, டெல்லி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

BREAKING: தேர்தலில் இவர்தான் முதலிடம்…. வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே வெளியான அதிரடி ரிப்போர்ட்…!

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல்…

50 minutes ago

ஓட்டு போட போறீங்களா?.. லிஸ்டுல பெயர் இருந்தா மட்டும் போதாது.. கையில் இந்த ‘ஒரிஜினல்’ இருக்கணும்…. தேர்தல் ஆணையத்தின் அதிரடி அறிவிப்பு…!

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 39 நாட்களாக…

54 minutes ago

“இன்று ஓட்டு போட போறீங்களா?”…. வாக்குச்சாவடிக்கு இதை எடுத்துட்டு போனா 3 மாசம் ஜெயில்?…. தேர்தல் ஆணையத்தின் அதிரடி உத்தரவு…!

தமிழகம் முழுவதும் இன்று சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 6…

57 minutes ago

“சாதிப் பெயரால் ஊருக்கா அவமானம்?”… தமிழகத்தில் இப்படியொரு கிராமமா? 15 ஆண்டு கால போராட்டமும், ஒரு தேர்தலைப் புறக்கணித்த ஊரும்..!

தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பரச்சேரி கிராம…

1 மணத்தியாலம் ago

“அதுக்கு சான்ஸே இல்ல”…. டிரம்பின் மூக்கை உடைத்த ஈரான்… அதிர்ந்த அமெரிக்கா… அடுத்து நடக்கும் திக் திக் நிமிடம்…!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான அணுஆயுத விவகாரத்தில் நிலவி வந்த போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது புதிய திருப்பத்தை…

1 மணத்தியாலம் ago

“தேர்தல் முடியட்டும்.. அப்புறம் இருக்கு கச்சேரி”… ஈரான் – அமெரிக்கா மோதலால் இந்தியாவுக்கு வரப்போகும் மிகப்பெரிய ஆபத்து…!

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் சட்டசபை தேர்தல்கள் நிறைவடைந்தவுடன், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.25 முதல் ரூ.28…

1 மணத்தியாலம் ago