நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட போதமலை பகுதியில் உள்ள கீழூர், மேலூர் மற்றும் கெடமலை ஆகிய மூன்று மலைக்கிராமங்கள், இந்தியத் தேர்தல் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளன. சுதந்திரம் அடைந்தது முதல் கடந்த பல தசாப்தங்களாக, இப்பகுதிகளுக்கு சாலை வசதி இல்லாததால் தேர்தல் அதிகாரிகள் சுமார் 7 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதி வழியாக ஒற்றையடிப் பாதையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தலைச்சுமையாகவே சுமந்து சென்று வந்தனர். வனவிலங்குகளின் அச்சுறுத்தல் மற்றும் கரடுமுரடான மலைப்பாதைகளுக்கு இடையே அதிகாரிகள் படும் அவதி இந்தத் தேர்தலோடு முடிவுக்கு வந்துள்ளது.
மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, அண்மையில் போதமலை கிராமங்களுக்குச் செல்ல வனப்பகுதியில் புதிய மண் சாலை அமைக்கப்பட்டது. இதன் பலனாக, வரலாற்றிலேயே முதல்முறையாக இந்தத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் உபகரணங்கள் வாகனங்கள் மூலமாக நேரடியாக கிராமங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. காலம் காலமாகத் தலைச்சுமையாக இயந்திரங்களைச் சுமந்து சென்ற அதிகாரிகளுக்கு இது பெரும் நிம்மதியை அளித்துள்ளது. பல மணிநேரப் பயணம் தற்போது சில நிமிடங்களாகக் குறைந்துள்ளது தேர்தல் பணியை எளிதாக்கியுள்ளது.
இந்த மாற்றமானது வெறும் போக்குவரத்து வசதி மட்டுமல்லாமல், அந்த மலைக்கிராம மக்களின் பல ஆண்டு கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது. போக்குவரத்து வசதி மேம்பட்டுள்ளதால், இனி வரும் காலங்களில் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளும் தடையின்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே பிறந்துள்ளது. “சுதந்திர இந்தியாவில் இப்போதுதான் எங்கள் பகுதிக்கு உண்மையான முன்னேற்றம் எட்டியுள்ளது” என மகிழ்ச்சி தெரிவிக்கும் போதமலை வாசிகள், இந்தத் தேர்தலை ஒரு திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல்…
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 39 நாட்களாக…
தமிழகம் முழுவதும் இன்று சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 6…
தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பரச்சேரி கிராம…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான அணுஆயுத விவகாரத்தில் நிலவி வந்த போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது புதிய திருப்பத்தை…
இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் சட்டசபை தேர்தல்கள் நிறைவடைந்தவுடன், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.25 முதல் ரூ.28…