Connect with us
Moto

TECH

16 GB RAM, 1TB Storage ஐபோனே தோத்திடும் போலயே.. மொபைல் சந்தையை தவிடுபொடியாக்க களமிறங்கும் MOTO G04

ஒரு காலத்தில் மோட்டோரோலா மொபைல் வைத்திருந்தவர்களை மிகுந்த ஏக்கத்துடன் பார்ப்போம். ச்சே.. நாமும் இப்படி ஒரு போன் எப்ப வாங்கப் போறோம் என்று பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தோம். ஆனால் மொபைல் சந்தையின் அரசு வளர்ச்சி அடுத்தடுத்த அப்டேட்களால் இன்று சாமானியர் கூட ஐ போன் வாங்கும் அளவிற்கு வளர்ந்துள்ளனர். ஆனால் மோட்டோரேலா மொபைல்களுக்கு மட்டும் எப்பவும் தனிச்சிறப்பு  இருக்கிறது. ஏனெனில் அதன் தரம். மிகவும் உறுதியாகவும், எளிதில் தொழில்நுட்பக் கோளாறுகள் வராதவாறும் இது வடிவமைக்கப்பட்டிருக்கும். இதனாலேயே மோட்டோரோவுக்கு அதிக பிரியர்கள் இருக்கின்றனர்.

என்னது.. நீங்களும் சிங்கிள் இல்லையா..? காதலரை அறிமுகப்படுத்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ‘சார்பட்டா பரம்பரை’ நடிகை…

   

தற்போது ஐ போன் பிரியர்களே வியக்கும் வகையில் மோட்டோரோலா தனது அடுத்த அப்டேட்டை வெளியிட்டிருக்கிறது. பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் போன் வாங்க நினைக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியாக வந்துள்ளது தான் MOTO G04. இந்தப்புது மாடல் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. அப்படி இதில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளது எனப் பார்ப்போமா?

Moto g4

#image_title

6.6 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) கொண்ட இந்த மோட்டோ போன் எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே உடன் வருகிறது. மேலும் பாண்டா கிளாஸ் பாதுகாப்பு (Panda Glass Protection) வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) இந்த மோட்டோ ஜி04 போன் செயல்படுகிற. இந்த பட்ஜெட்டில் 14 ஓஎஸ் கிடைப்பது முதல் முறையாகும்.

மேலும் இந்த போனில் 8 ஜிபி ரேம் (4 ஜிபி ரேம் + 4 ஜிபி டைனாமிக் ரேம்) + 64 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் (8 ஜிபி ரேம் + 8 ஜிபி டைனாமிக் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வகையில் வெளிவர உள்ளது. வெளிப்புற ஸ்டோரேஜ் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

ஊட்டி மலை ரயிலுக்கு மட்டும் ஏன் இந்த இருப்புப் பாதை..? வியக்க வைக்கும் ஜில் தகவல்கள்

Dolby Atmos, Dual SIM, microSD Slot, 3.5 Audio jack சப்போர்ட் கொண்ட ஸ்பீக்கர்கள் வருகின்றன. இந்த மோட்டோ போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Scanner) வருகிறது. கேமராவைப் பொறுத்தவரை மோட்டோ ஜி04 போனில் 16 எம்பி மெயின் கேமரா + AI லென்ஸ் கொண்ட டூயல் ரியர் கேமரா வருகிறது.

Moto 3

#image_title

இதுமட்டுமல்லாது இந்த கேமராவில் போர்ட்ராய்டு (Portrait), நைட் விஷன் (Night Vision), எச்டிஆர் (HDR) போன்ற சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதோடு ஃபுல்எச்டி (FHD) வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது. 5 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவிலும் ஃபுல்எச்டி வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. 178.8 கிராம் எடை கொண்டிருக்கிறது.

Concord Black, Sea Green, Satin Blue, Sunrise Orange ஆகிய 4 கலர்களில் இந்த மோட்டோ ஜி04 விற்பனைக்கு வர இருக்கின்றன. தற்போது இதன் விலை 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடல் ரூ.6,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.7,999ஆகவும் இருக்கிறது.

author avatar
Continue Reading

More in TECH

To Top