சோஷியல் மீடியாக்களில் தங்களுடைய சொந்தக் கருத்துக்களைப் பதிவேற்றியும், அரட்டைகளுக்கும் பயன்படுத்தி வந்த நெட்டிசன்கள் அதில் வீடியோ போட்டால் பார்வைகைளைப் பொறுத்து பணம் கிடைக்கும் என்ற முறை வந்தவுடன் ஆளாளுக்கு வீடியோக்களை எடுத்துப் பதிவேற்றம் செய்து பேஸ்புக், யூடியூப் மூலம் தனி சேனல் தொடங்கி சம்பாதிக்க ஆரம்பித்து விட்டனர். இன்று இதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டு சோஷியல் மீடியாக்களில் வருமானம் ஈட்டுபவர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர்.
தற்போது யூடியூப்பில் லட்சக்கணக்கான சேனல்கள் இருந்தாலும் அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது தான் Mr Beast சேனல். சாகச விளையாட்டுக்கள் மூலம் வீடியோக்களைப் பதிவேற்றி கோடிக்கணக்கான பார்வையாளர்களைப் பெற்று இன்று அதன்மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார் Mr Beast என இணைய உலகில் அறியப்படும் இளைஞரான ஜிம்மி டொனால்ட்சன்.

#image_title
அமெரிக்காவைச் சேர்ந்த வெறும் 24 வயதே ஆன ஜிம்மி டொனால்ட்சன் தனது சேனலை கடந்த 2012-ல் ஆரம்பித்தார். கிட்டத்தட்ட 23.06 கோடி சந்தாதாரர்களைக் கொண்டு யூடியூப் உலகின் ராஜாவாகத் திகழ்கிறார். மிஸ்டர் பீஸ்ட், மிஸ்டர் பீஸ்ட் 2, மிஸ்டர் பீஸ்ட் கேமிங், மிஸ்டர் பீஸ்ட் ஷார்ட்ஸ், பீஸ்ட் ரியாக்ட்ஸ், பீஸ்ட் ஃபிலந்த்ரோபி ஆகிய யூடியூப் சேனல்களை நடத்தி வரும் ஜிம்மி, ஆண்டுக்கு 26 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை சம்பாதித்து வருகிறார். இந்திய மதிப்பில் மாதத்திற்கு சுமார் 40 கோடி ரூபாய் சம்பாதிப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
மார்க்கெட் போனாலும் பரவாயில்லை.. அந்தக் கால லேடி விக்ரம் செஞ்ச தரமான சம்பவம்
இவர் ஜிம்மி டோனல்ட்சன் பிரபல டைம்ஸ் இதழின் உலகின் அதிக செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமன்றி ஏராளமான சமூக சேவைகளையும் செய்து வருகிறார்.
இந்நிலையில் இவர் எக்ஸ் தளத்தில் முதன் முதலாகப் பதிவேற்றிய வீடியோ ஒன்று 8 நாட்களில் இதுவரை 175 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று இமாலய சாதனை படைத்திருக்கிறது. மேலும் இதற்காக அவருக்கு கோடிக் கணக்கில் வருமானம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு டாலர் vs 100,000,000 டாலர் கார் என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட வீடியோவுக்கு சுமார் $2,50,000 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹ 2 கோடி) வருமானம் சென்றுள்ளது.

#image_title
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறும் போது, “எனது முதல் எக்ஸ் வீடியோ $ 250,000 (சுமார் 2 கோடி) வருமானம் ஈட்டியுள்ளது. ஆனால், அது அனைவருக்கும் இது கிடைக்கும் எனச் சொல்ல முடியாது. எக்ஸ் தளத்தில் விளம்பரப்படுத்துவோர் எனது வீடியோவை கவனித்து அதில் விளம்பரப்படுத்த முன்வந்துள்ளனர்.
இதன் காரணமாகவே எனது வருவாய் உங்கள் வருவாயைக் காட்டிலும் அதிகமாக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பான ஸ்க்ரீன்ஷாட் விவரங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். அதில் அவர் இந்த ஒரு வீடியோ மூலம் 2.63 லட்சம் டாலர், அதாவது 2 கோடி ரூபாய் சம்பாதிக்க உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த பணத்தை 10 பேருக்குப் பிரித்துக் கொடுப்பதாகவும் அவர் மற்றொரு பதிவில் தெரிவித்துள்ளார்.
இவர் பதிவிட்ட முதல் வீடியோவிலேயே வரலாறு படைத்து எலான் மாஸ்க்-ன் புருவத்தை உயர்த்தியுள்ளார் Mr Beast.