“இனி சினிமாவில் நடிக்க போவதில்லை”… கட்சியின் பெயரை அறிவித்த கையோடு சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்த விஜய்…

By Begam

Published on:

தமிழ் சினிமாவின் முன்னை நட்சத்திரமாக கொடி கட்டி பறப்பவர்  நடிகர் விஜய். இவர் அரசியலில் களமிறங்க உள்ளார் என்று தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்த நிலையில், அவர் இன்று தனது கட்சி பெயரை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளார். அதன்படி அவர் தனது கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயரிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

   

இதை அவரது ரசிகர்கள் தற்பொழுது கொண்டாடி தீர்த்து வருகின்றனர். நடப்பு மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்த சட்டசபைத் தேர்தல் நடைபெறும் 2026ம் ஆண்டு தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்றும் அறிவித்துள்ளார்.

மேலும் அவர் அந்த அறிக்கையில் முக்கியமான தகவல் ஒன்றையும் பதிவு செய்துள்ளார். அதாவது, ‘ அரசியல் என்பது எனக்கு பொழுதுபோக்கு அல்ல, அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள விரும்புகிறேன். என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த பணிகளை, கட்சி வேலைகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன்’ என கூறியுள்ளார்.

இதன்படி பார்க்கும் பொழுது தற்போது இவர் நடிப்பில் கோட் படம் உருவாகி வருகிறது. ஆனால் இது தளபதியின்  கடைசி படம் கிடையாது. இத்திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கில் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தை தயாரித்த,  டிவிவி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் தெலுங்கில்  ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார் என்றும், விஜய்யின் 69-வது படமாக உருவாகும் இத்திரைப்படம் தான் அவரின் கடைசி படம் என்றும் கூறப்படுகிறது.