Connect with us

CINEMA

என்னது.. நீங்களும் சிங்கிள் இல்லையா..? காதலரை அறிமுகப்படுத்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ‘சார்பட்டா பரம்பரை’ நடிகை…

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனின் ‘நெருங்கி வா முத்தமிடாதே’என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சஞ்சனா நடராஜன். பின்னர் இதைத் தொடர்ந்து இறுதிச்சுற்று, 2.0 ,சார்பட்டா பரம்பரை, டியர் ஃப்ரெண்ட் (மலையாளம்), நோட்டா படத்தில் விஜய் தேவர் கொண்டாவுடன் நடித்தார்.  ஜகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட  படங்களில் துணைவேடங்களிலும் நடித்துள்ளார்.

   

இவர் நடிகையாக மட்டுமல்லாமல் மாடலாகவும் இருந்துள்ளார். மாடலிங் துறையில் ஆர்வம் கொண்ட இவர் 2012 மிஸ் சவுத் இந்தியா போட்டியில் பங்கேற்றார். இவர் நடிப்பில் வெளியான ‘அஸ் ஐ அம் சபரிங் பிரம் காதல்’  என்ற வெப் சீரிஸ் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது .

இதுமட்டுமின்றி கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் கடைசியில் எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அடுத்ததாக போர் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சஞ்சனா நடராஜன் காதலர் தினத்தை முன்னிட்டு தனது காதலருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்துள்ளார்.

தனது காதலர் பால் என்பவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  அறிமுகப்படுத்தி உள்ளார். கொரியோகிராஃபராகவும், குறும்படங்களில் நடித்து வருபவருமான பால் என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வருகிறார் சஞ்சனா நடராஜன் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைப் பார்த்த ரசிகர்கள் அப்படின்னா நீங்களும் சிங்கிள் இல்லையா என்று விரக்தியில் உள்ளனர்.

Continue Reading

More in CINEMA

To Top