Connect with us

CINEMA

மீண்டும் நேருக்கு நேர் மோதப்போகும் இரு மலைகள்.. ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் வேட்டையன் & GOAT.. வெயிட்டிங்கே வெறியேறுதே..

பண்டிகை என்றாலே கொண்டாட்டம்தான். அதிலும் முன்னணி நடிகர்கள் திரைப்படங்கள் ரிலீஸ் ஆனால் இன்னும் ரசிகர்களுக்கு கொண்டாட்டமோ கொண்டாட்டம்தான். அந்த வகையில் தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படமும், தளபதி விஜயின் கோட் திரைப்படமும் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாக  இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

#image_title

   

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் திரைப்படம் ஏப்ரலில் ரிலீஸ் ஆகும் என்றும், அதேபோல விஜயின் கோட் திரைப்படம் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த இரண்டு திரைப்படங்களும் தீபாவளியில் ரிலீசாக இருப்பதாக கூறப்பட்டு வருகிறது .சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார்.

#image_title

இத்திரைப்படத்தினை த சே ஞானவேல் இயக்குவதும், லைக்கா நிறுவனம் தயாரிப்பதும், நாம் அறிந்ததே. மேலும்அனிருத் இசை அமைத்தும் வருகிறார். தற்போது  இத்திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் ப்ரோடக்சன் வேலைகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதனால் தீபாவளிக்கு வேட்டையன் திரைப்படத்தை ரிலீஸ் செய்ய பட குழு திட்டமிட்டு வருகிறார்கள். மற்றொரு புறம் பார்த்தால்  நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படம் விஜயின் கேரியரில் முக்கியமான படம் என்றே கூறலாம். ஏனெனில் இதற்கடுத்ததாக ஒரு படம் நடித்துவிட்டு நடிகர் விஜய் அரசியலில் இறங்கபோவதாக கூறியுள்ளார் .இதனால் இத்திரைப்படத்தை எதிர்பார்த்து  ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். விஜயின் பிறந்தநாளுக்கு திரைப்படத்தை வெளியிடுவதாக படக்குழு ஏற்கனவே முடிவு செய்திருந்த நிலையில், தற்போது தீபாவளிக்கு களமிறக்க முடிவு செய்துள்ளார்கள். அதன்படி இரு பெரும் நடிகர்களின் திரைப்படங்கள் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதனால் தற்பொழுது ரசிகர்கள் பயங்கரமான கொண்டாட்டத்தில்  குதித்துள்ளனர்.

Continue Reading

More in CINEMA

To Top