இதுவரை வெளியான ஆன்ட்ராய்டு போன்களில் அதிகபட்ச சிறப்பம்சங்களைக் கொண்டாதாகவும், வடிவமைப்பு மற்றும் விலையில் உச்சமுமாக விளங்கிய சாம்சங் கேலக்ஸி S23 Ultra ஸ்மார்ட் போனுக்கு சவால் விடும் விதமாக அதன் அடுத்த அப்டேட்டை வெளியிட்டு அசர வைத்துள்ளது சாம்சங் நிறுவனம்.
ஆன்ட்ராய்டு செயலியில் சாம்சங் ஸ்மார்ட் போன் வரலாற்றில் S23 வகை போன்களே இதுவரை அரசனாக விளங்கியது. தற்போது இதன் அப்டேட்டாக வெளிவந்துள்ள ஸ்மார்ட் போன் தான் Samsung S24 Ultra. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போனில் அப்படி என்ன சிறப்பம்சங்கள் உள்ளது தெரியுமா?
Galaxy S24 அல்ட்ராவின் வடிவமைப்பு S23-ஐ ஒப்பிடும் போது புதிய மாற்றங்களைக் கொண்டுள்ளது. S24 அல்ட்ரா குறுகிய பெசல்களுடன் பிளாட் டிஸ்ப்ளேவுடன் வருவதால், சாதாரணமாக இருக்கும் கார்னர் வளைவுகள் இதில் இல்லை. மேலும் சேஸ் அலுமினியத்திற்கு பதிலாக டைட்டானியத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மேம்பட்ட பாதுகாப்பைக் கொடுக்கிறது. மற்றபடி அனைத்தும் Galaxy S23 Ultra உடன் ஒத்துப் போகிறது. Galaxy S24 Ultra ஆனது S23 Ultra உடன் ஒப்பிடும்போது 8.6mm மெல்லியதாகவும் 1g இலகுவாகவும் உள்ளது. திரை புதிய கார்னிங் கொரில்லா ஆர்மரால் பாதுகாக்கப்படுகிறது.
2 கோடியை அள்ளிக் கொடுத்த எலான் மாஸ்க்.. ஒரே வீடியோவில் X தளத்தையே அதிர வைத்த Mr Beast
Galaxy S24 Ultra இன் கேமரா அமைப்பில் சில புதிய முன்னேற்றங்கள் உள்ளன. Galaxy S24 Ultra ஆனது 200 MP முதன்மை கேமராவையும், 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 10 MP டெலிஃபோட்டோ கேமராவையும், 12 MP அல்ட்ரா-வைட் கேமராவையும் கொண்டுள்ளது. மேலும் செல்ஃபிக்களுக்கு, சாம்சங் 12 MP முன் கேமராவைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இதுமட்டுமல்லாது AI தொழில்நுட்பத்தால் இது மேம்படுத்தப்பட்டுள்ளது. சார்ஜ் திறனைப் பொறுத்தவரை Samsung Galaxy S24 Ultra ஆனது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் -ல் 5,000mAh பேட்டரியில் இயங்குகிறது. செயல்திறனைப் பொறுத்தவரை மென்பொருள் பக்கத்தில், சாம்சங் 7 வருட OS மற்றும் பாதுகாப்பு அப்டேட்களை அறிவித்துள்ளது, மேலும் கூகிள் பிக்சல் 8 தொடருடன் கூடிய முதன்மை ஸ்மார்ட்போன் சலுகைகளை உருவாக்குகிறது.
Samsung Galaxy S24 Ultra ஆனது 12GB+256GB வகைக்கு ரூ.1,29,999 , 12GB+512GB வகைக்கு ரூ.1,39,999 மற்றும் 12GB+1TB வகைக்கு ரூ.1,59,999 விலை நிர்ணயம் செய்யப்பட்டு தற்போது புக்கிங் நடைபெறுகிறது.