பைக் – ஆட்டோ இரண்டையும் கலந்து அசத்தலான ஒன்றை அறிமுகம் செய்த ஹீரோ நிறுவனம்.. இதுல இத்தனை அம்சங்கள் இருக்கா..?

By John

Updated on:

Hero 1

பெட்ரோல் விற்கும் விலை, வாகன வரி, வாகன வலை ஏற்றம் அடுத்தடுத்து வரும் இன்னல்களால் என ஒரு வீட்டில் ஒரு பைக் வாங்குவது என்பதே குதிரைக் கொம்பாக உள்ளது. இந்நிலையில் ஹீரோ நிறுவனம் பைக் மட்டுமல்ல ஆட்டோவும் வழங்குகிறோம் என அதிரடியாக தனது புது மாடல் ரக ஸ்கூட்டர் ஆட்டோவை வெளியிட்டுள்ளது.

SURGE S32 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வாகனத்தைத் தயாரித்திருப்பது புதிய பைக் கம்பெனி அல்ல. இந்தியர்களிடையே அதிகமாகப் புழங்கி வரும் வாகன நிறுவனமான ஹீரோ நிறுவனத்தின் தயாரிப்பு தான். ஆனால் பெயர் மட்டும SURGE S32 என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ஒரு 2-இன்-1 வகை வாகனமாகும். அதாவது, மூன்று சக்கர ரிக்‌ஷாவில் இருந்து மின்சார ஸ்கூட்டராக மாறக்கூடியது.

   
Hero 3
hero 1

கேப்டன் விஜயகாந்துக்கு வசனமே இல்லாமல் மௌனமாக நிற்க வைத்த இயக்குநர்.. சின்னக்கவுண்டர் வெற்றி ரகசியம் சொன்ன ஆர்.வி.உதயக்குமார்

இந்த Surge S32 EV வாகனத்தின் ரிக்‌ஷாவில், கேபின், விண்ட்ஸ்கிரீன், லைட்டிங் மற்றும் வேண்டுமென்றால் மழை, வெயிலில் இருந்து பாதுகாக்கக் கூடிய மென்மையான கதவுகள் ஆகியவை உள்ளன. இவை இது ஸ்கூட்டர் என்பதையே மொத்தமாக மாற்றிவிடும் அளவிற்கு தோற்றம் கொண்டதாக உள்ளது. மேலும் LED ஹெட்லைட்கள், இண்டிகேட்டர்கள் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்டேஷனுடன் பொருத்தப்பட்ட இந்த Surge S32 EV ஸ்கூட்டர் 3W இன் பவர்டிரெய்ன் மற்றும் பேட்டரியுடன் மூலம் இணைக்கிறது.

குறிப்பாக இந்த பைக் ரிக்‌ஷாவில் 500 கிலோ வரை கணிசமான சுமையை கொண்டுசெல்லலாம். இது காய்கறிகள், பலசரக்கு போன்றவற்றை சந்தையில் இருந்து சில்லறை கடைகளுக்கு கொள்முதல் செய்வோர் முதல் தெருதோறும் சென்று விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கும் என பல்வேறு வணிக பயன்பாடுகளுக்கு இந்த வாகனம் ஏற்றதாக இருக்கும் என நம்பப்படுகிறது.

Hero 2
Hero 2

AK63 அப்டேட்.. திருமணம் ஆகாத 53 வயது நடிகையுடன் கைகோர்க்கும் தல அஜித்.. 24 வருடங்களுக்கு பிறகு சேரும் Favorite ஜோடி..

இதுமட்டுமல்லாது இரு சக்கர வாகனம் 4bhp வேகமான வேகத்தை வழங்குகிறது. Surge S32 EV வாகனத்தின் ரிக்‌ஷா 11 kWh பேட்டரி மூலமும், ஸ்கூட்டருக்கு 3.5 kWh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. மூன்று சக்கர வாகனமான ரிக்‌ஷா மணிக்கு 50 கிமீ வேகத்தில் செல்லும். ஸ்கூட்டர் மணிக்கு 60 கிமீ வேகத்தில் சற்று வேகமாக செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி இந்திய சாலைகளில் இந்த வாகனம் தான் ராஜாவாகப் பயணிக்கப் போகிறது என்பதில் ஐயமே இல்லை.

author avatar