விஜயகாந்துக்கு வசனமே இல்லாமல் மௌனமாக நிற்க வைத்த இயக்குநர்.. ‘சின்னக்கவுண்டர்’ வெற்றி ரகசியம் சொன்ன RV.உதயக்குமார்..

By John

Updated on:

RV Udayakumar

கேப்டன் விஜகாந்துக்கு ஆக்சன் படங்களிலில் மும்முரமாக நடித்து வந்த நேரம். வைதேகி காத்திருந்தாள் என்ற மெஹா ஹிட் படத்திற்குப் பிறகு அதுபோன்ற மாறுபட்ட கதைக்களங்களை நடிக்க நல்ல கதாபாத்திரங்கள் அமையவில்லை. ஆனால் இந்தக் குறையைப் போக்கவே அவருக்கென்று வந்த படம் தான் சின்னக் கவுண்டர்.

கடந்த சில வருடங்களுக்கு முன் எப்படி பேய் படங்கள் ஒரு காலத்தில் தொடர்ச்சியாக வந்ததோ அதேபோல் கிராமத்து பண்ணையார், பஞ்சாயத்து படங்களும் தொடர்ச்சியாக வந்தன. ரஜினி, கமலையும் இந்த பண்ணையார், நாட்டாமை கதாபாத்திரங்கள் விடவில்லை. அப்படி உருவானதுதான் எஜமான், தேவர் மகன் போன்ற படங்கள். அதேபோல் புரட்சிக் கலைஞருக்கும் லைப்ஃடைம் செட்டில்மெண்ட் ஆக தமிழ் சினிமாவில் முற்றிலும் மாறுபட்ட படமாக அமைந்த படம் தான் சின்னக்கவுண்டர்.

   
Chinna gounder
capain 2

எம்.ஜி.ஆரை ஒரே வார்த்தையில் குளிர வைத்த அண்ணா.. அப்படி என்ன சொல்லியிருப்பாரு?

ஆர்.வி. உதயக்குமார் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விஜயகாந்துடன், சுகன்யா, கவுண்டமணி, செந்தில், மனோரமா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தின் பாடல்களை இயக்குநரே எழுத இளையராஜாவின் இசையில் பாடல்களும் கிராமத்து மண் வாசனை வீசியது.

இப்படம் பற்றி ஆர்.வி. உதயக்குமார் கூறுகையில், “ நான் சின்னகவுண்டர் படம் குறித்து விஜயகாந்திடம் சொன்னது இதான். அதில் துண்டை இடுப்பில் கட்டுனா கோயிலுக்கு போறான், தோளில் போட்டா பஞ்சாயத்துக்கு போறான், அப்படி தூக்கி வச்சா பட்டைய கிளப்புறான்- இதுதான் கேரக்டர். ஊரே பார்த்து கையெடுத்து கும்பிடும் அவர் ஒரு நாள் ஊருக்கு முன்பு தலை குனிந்து சென்றார். அதுக்கு காரணம் என்ன? இதுதான் கதை.

Vijayakanth
captain 23

ஆனால் படத்தில் விஜயகாந்துக்கு டயலாக்கே இருக்காது. இதை என்னிடம் நேரடியாக கேட்காமல் என் அசிஸ்டென்டுகளை கூப்பிட்ட விஜயகாந்த், “ஹே என்ன உதய் எனக்கு டயலாக்கே வெக்க மாட்டானா, அவன் அவன் பேசுறான், நான் பாட்டுக்கு சும்மாவே நின்னுகிட்டு இருக்கேன்.. என்னங்கடா நடக்குது. இந்த படம் ஓடாதுன்னு சொன்னார்.

ரஜினிகாந்த் தமிழன் இல்லை, அதனால் தான் இப்படி ஒரு மோசமான செயலை செய்தார்.. பகிர் கிளப்பிய பயில்வான்..

அதன் பிறகு நான் விஜயகாந்திடம் சொன்னேன், இந்த படத்தில் ஹீரோவாகிய உங்கள் கேரடக்டர் உன்னதமானது. ஊரே உங்களை பற்றி பேசும் போது நீங்களும் உங்களை பற்றி பேசினால் நல்லா இருக்காது என்றேன். உடனே புரிந்து கொண்டு பின்னர் அது குறித்து கேட்பதையே விட்டுவிட்டார். இவ்வாறு உதயகுமார் அந்தப் பேட்டியில் தெரிவித்தார்.

author avatar