எம்.ஜி.ஆரை ஒரே வார்த்தையில் குளிர வைத்த அண்ணா.. அப்படி என்ன சொல்லியிருப்பாரு?

By John

Updated on:

Annadurai

பெரியாரின் திராவிடக் கட்சியிலிருந்து பிரிந்து வந்து அண்ணாதுரை திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி ஆரம்பித்த தருணம் அது. அண்ணாத்துரையுடன் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ். ராஜேந்திரன், நெடுஞ்செழியன், வீரப்பன், முரசொலி மாறன் ஆகியோர் கை கோர்த்தனர். காமராசர் ஆட்சிக்குப் பின் அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸை தோற்கடித்து முதன்முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது திமுக. அண்ணாதுரை தமிழ்நாட்டின் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

anna mgr
anna mgr

இந்நிலையில் அறிஞர் அண்ணாவுக்கும், எம்.ஜி.ஆருக்குமான நெருக்கம் குறித்த சுவாரஸ்ய தகவல் : அண்ணாவுக்கு எப்போதும் எம்ஜிஆர் வீட்டு சாப்பாடு பிடிக்கும். அண்ணா பலமுறை எம்ஜிஆருடன் அவரது வீட்டில் உணவு உண்டு உள்ளார். ஒரு நாள் அப்படி உணவு உண்ணும் போது. எம்ஜிஆரும் அண்ணாவும் சில பிரச்சினைகள் குறித்து பேசினார்கள்.

   

கல்நெஞ்சையும் கரைத்த நிகழ்வு.. 36 வருட பகையை மறந்து இளையராஜா மகளுக்கு வைரமுத்து செய்த செயல்..

இறுதியாக அண்ணா அவர்கள் எம்ஜிஆர் பற்றி சொன்னது. மறக்க முடியாத வார்த்தைகள் ஆகும். ”தம்பி உன் பேர்லே பலர் குறை சொன்னார்கள். நீ ஆட்சி, அரசியல் விவகாரங்களில் கலந்துக்கொள்வதில்லை.. எப்பவும் நடிப்பிலே இருக்கிற.. சட்டசபை கூட்டத்துக்கு வர்றதில்லைன்னு சொன்னாங்க.? அவங்களுக்கு தெரியாது நீ தினமும் மேக்கப் போடுறது கட்சிக்காகத்தான் ..

Periyar
periyar

ஆயிரம் மேடையிலே நாங்கெல்லாம் சொல்ல முடியாததை நீ ஒரு படத்திலே ஒரு காட்சியிலே ஒரே வார்த்தையில் சொல்லி விடுகிற. .நீ ராமச்சந்திரன் ஆனால் வானத்துக்கும் சந்திரன், எட்டியிருந்து ஒளி கொடுக்கிறவன். நீ மற்றவங்களுக்கு கைவிளக்கு. கிட்டேயிருந்து ஒளி கொடுப்பவன். உறுதியோடு இருப்பதால் சில பிரச்சினைகளும் தடங்கலும் வரத்தான் செய்யும். எதையும் நீ மற்றவங்களுக்கு வழிக்காட்டியாக இருக்க வேண்டும். தவிர மற்றவர்கள் குறையை ஒரு பொருட்டா நினைக்ககூடாது என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

015

அண்ணாவின் இந்த உத்வேகத்தால் இன்னும் தீவிரமாக அரசியலில் ஈடுபடத் துவங்கி பின்னாளில் தமிழ்நாட்டையே ஆண்டார் இந்த மன்னாதி மன்னன். மேலும் அண்ணாவின் அமைச்சரவையில் தனக்கு வழங்கப்பட்ட அமைச்சர் பொறுப்பையும் துறந்து, அதுகுறித்து அண்ணாவிடமும் தெளிவுப் படுத்தினார்.