Connect with us

கல்நெஞ்சையும் கரைத்த நிகழ்வு.. 36 வருட பகையை மறந்து இளையராஜா மகளுக்கு வைரமுத்து செய்த செயல்..

CINEMA

கல்நெஞ்சையும் கரைத்த நிகழ்வு.. 36 வருட பகையை மறந்து இளையராஜா மகளுக்கு வைரமுத்து செய்த செயல்..

 

பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து – தமிழ் சினிமாவை 1980களில் ஆட்சி செய்த மும்மூர்த்திகள் என்றால் அது மிகையல்ல. இசையமைப்பாளர் இளையராஜாவும், கவிஞர் வைரமுத்துவும் சினிமாத்துறையில் ஒன்றாக பயணித்தது வெறும் ஆறே ஆண்டுகள்தான். ஆனால், இன்றும் அந்த ஆறு ஆண்டு காலத்தில் உருவான பாடல்கள் உயிர்வாழ்கின்றன.

மீண்டும் மீண்டும் கேட்டு ரசிக்கப்படுகின்றன. இன்று வரை அவர்களது பயணம் ஒன்றாக நீடித்திருந்தால், இன்னும் எத்தனை எத்தனையோ ஆயிரம் பாடல்களை அவர்கள் தந்திருக்க முடியும். ரசிகர்கள் ரசித்திருக்க முடியும். இளையராஜா – வைரமுத்து பிரிவால் அதிகமாக நஷ்டபட்டவர்கள் தமிழ் சினிமா ரசிகர்கள்தான்.

   

பாரதிராஜா இயக்கத்தில், இளையராஜா இசையில் உருவான படம் முதல் மரியாதை. சிவாஜி கணேசன், ராதா நடித்த இந்த படம், அந்த காலத்தில் பிளாக் பஸ்டர் மூவியாக இருந்தது. இப்போதும் இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. ஏனெனில் படமும், படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு காட்சியும் பாடல்களும் தேனில் கலந்த பலாச்சுளை போல ரசிகர்களை தித்திக்க வைக்கிறது. 1985ல் வெளியான இந்த படத்தில், பூங்காற்று திரும்புமா என்ற பாடலில், மெத்தை வாங்கினேன், தூக்கத்தை வாங்கலே என்று வரிகள் வரும்.

வைரமுத்துவிடம் இந்த வரிகள் பிடிக்கவில்லை, என்று இளையராஜா மறுப்பு தெரிவிக்க, வைரமுத்து எனக்கு பிடித்த ரசித்த வரிகள் இவை, மாற்ற முடியாது என அவரும் வீம்பு பிடிக்க முதலில் அப்படி உருவானதுதான் அவர்களது மோதல். அடுத்தடுத்த படங்களில் மோதல் அதிகரிக்க, இளையராஜா, வைரமுத்து நிரந்தரமாக பிரிந்து இப்போது 36 ஆண்டுகள் ஆகிறது.

இளையராஜா இசைக்கு வைரமுத்து எழுதுவதில்லை. வைரமுத்து எழுதிய வரிகளுக்கு இளையராஜா இசை அமைப்பதில்லை என்ற கொள்கை பிடிவாதம் இன்று வரை நீடித்து வருகிறது. ஆனால் சமீபத்தில், இளையராஜா மகள் பவதாரணி கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு, தனது 36 ஆண்டுகால பகை மறந்து, தேசிய விருது பெற்ற பாடகி பவதாரணி மறைவு, துயர்படும் உள்ளங்களுக்கு எல்லாம் ஆழ்ந்த இரங்கல் என தனது பதிவை செய்து வருத்தம் தெரிவித்து இருந்தார் வைரமுத்து.

அதுவே, வைரமுத்து பவதாரணிக்கு அஞ்சலி செலுத்த நேரில் போயிருந்தால் இருவரது பகையும் மறந்து, மீண்டும் ஒன்று சேர்ந்திருக்கலாம். ஆனால் காலச் சூழ்நிலையில் வைரமுத்து போகவில்லை. எனினும் இளையராஜா மீதுள்ள பகைமையை பாராட்டாமல், அவரது மகள் மறைவுக்கு வருத்தம் தெரிவித்து தன் உயர்ந்த பண்பை, கனிந்த உள்ளத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் கவிஞர் வைரமுத்து.

author avatar
Sumathi
Continue Reading
To Top