ரஜினிகாந்த் தமிழன் இல்லை, அதனால் தான் இப்படி ஒரு மோசமான செயலை செய்தார்.. பகிர் கிளப்பிய பயில்வான்..

By Sumathi

Updated on:

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் நடந்த லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டார். மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய இந்த படத்தில், அவர் கேமியோ ரோலிலும் நடித்திருக்கிறார்.

இந்த படம் குறித்தும், நடிகர் விஜய் குறித்தும் பல விஷயங்களை ரஜினிகாந்த் இந்த விழா மேடையில் பேசினார். மேலும் ரஜினி மகள் ஐஸ்வர்யா, என் அப்பாவை சிலர் சங்கி என அழைக்கின்றனர். அவர் சங்கி அல்ல என்றும் பேசியது பயங்கர வைரலானது. ஆனால் அதே வேளையில் ரஜினி இந்த விழாவில் கலந்துக்கொண்டதே இப்போது பெரிய சர்ச்சையாக மாறி இருக்கிறது.

   

இசைஞானி இளையராஜா மகள் பவதாரணி, சமீபத்தில் இலங்கையில் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இலங்கையில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்பட்ட அவரது உடல், அஞ்சலிக்காக இளையராஜா வீட்டில் வைக்கட்டிருந்த அந்த நேரத்தில், ரஜினிகாந்த் அந்த லால் சலாம் பட விழாவில் கலந்துக்கொண்டு இருக்கிறார்.

இதற்கும் இளையராஜாவின் நெருங்கிய நண்பர் ரஜினிகாந்த், சாமி, கடவுள் என்றுதான் அவரை ரஜினி அழைக்கிறார். இப்படி தனக்கு மிகவும் வேண்டிய ஒருவரது வீட்டில், அன்பு மகளை இழந்து தவிக்கிற அந்த சூழலில் ரஜினி விழாவில் கலந்துக்கொண்டது சரிதானா என்பது இப்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இதுகுறித்த வீடியோ வெளியிட்டுள்ள பத்திரிகையாளர் மற்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன், இளையராஜாவின் அன்பு மகள், செல்லமகளின் சடலம், இளையராஜா வீட்டில் இருக்கும்போது ரஜினி இந்த விழாவில் கலந்துக்கொண்டிருக்கிறார். ஒரு வீட்டில் இப்படி துக்க சம்பவம் நடந்தால் அருகில் 3 வீதிகளில் இருப்பவர்கள் சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு ஆறுதலாக இருப்பார்கள்.

சமைத்து கொடுப்பார்கள். இதுதான் தமிழர் பண்பாடு. நாகரிகம். ரஜினி உண்மையில் தமிழர்தானா, அல்லது சும்மா நடிக்கிறாரா, இளையராஜாவிடம் பழகிய நட்பும் நடிப்புத்தானா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறேன் என வீடியோவில் பேசியிருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.

author avatar
Sumathi