மிரள வைக்கும் யுக்தி.. கட்டுமான பொறியியல் துறையின் உச்சம் தொட்ட பனாமா கால்வாய்.. இப்படித்தான் கட்டுனாங்களா?

By John

Updated on:

இருபதாம் நூற்றாண்டின் கட்டுமானத் துறையின் அதிசயமாகவும் உலக அளவில் மிகப்பெரும் பொருளாதார போக்குவரத்துமாக செயல்பட்டு வருகிறது பனாமா கால்வாய். வட அமெரிக்க மற்றும் தென் அமெரிக்க ஆகிய இரண்டு கண்டங்களையும் கடல்வழி இணைக்கும் ஒரு மிகப்பெரிய செயற்கைக் கால்வாய் மனித முயற்சியில் கட்டப்பட்டுள்ளது இன்றுவரை பெரிய அதிசயமாகவே பார்க்கப்படுகிறது.

மேலும் பனமா நாட்டின் பொருளாதாரமே இந்த ஒரு கால்வாயை வைத்துத்தான் செயல்படுகிறது என்றால் இதன் முக்கியத்துவத்தை அறியலாம். சாதராணமாக வட அமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து ( கிழக்கு ) சான் ஃபிரான்சிஸ்கோவுக்கு கடல் மார்க்கமாக செல்ல வேண்டும் என்றால், தென் அமெரிக்காவின் ஹார்ன் முனையைச் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நிலையில் அதற்காக எடுத்துக்கொண்ட நாட்களும் தூரமும் மிக அதிகம். கிட்டத்தட்ட 18 ஆயிரம் மைல்கள் சுற்ற வேண்டும்.அது போலவே மற்ற ஐரோப்பிய ஆப்பிரிக்க நாடுகளும் அட்லாண்டிக் கடல் வழியாக பசிபிக் பெருங்கடலை அடைய நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டும்.

   
Panama
panama 3

ஸ்பெயின் ராணுவ கடல் வீரர் வாஸ்கோ நுனீஸ் தி பல்போவா 1534 ல் பனாமா நாட்டில் உள்ள உயரமான குன்றில் ஏறி பார்த்தபோது ‘ மேற்கே மாபெரும் பசிபிக் பெருங்கடலும் கிழக்கில் உள்ள அட்லாண்டிக் பெருங்கடலும் ஒரு சிறிய நிலப்பரப்பில் பிரிக்கப்பட்டிருப்பதைக் கண்டார். அப்போது இதை அரசிடம் தெரிவிக்க கால்வாய் வெட்டடும் முதல் முயற்சி தோல்வி அடைந்தது.

அதன்பின் சில நூறு வருடங்களுக்குப் பிறகு  பனாமா கால்வாயை வெட்டும் பணிகள் 1903-ம் ஆண்டில் தொடங்கி 1914-ம் ஆண்டில் முடிக்கப்பட்டன. பிரெஞ்சுக்காரர்கள் இந்த பாரம்பரிய கட்டுமானத் திட்டத்தைத் தொடங்கிய போதும் அமெரிக்காவால் தான் இந்த வேலையை முடிக்க முடிந்தது. இந்தக் கால்வாயின் மொத்த செலவு $ 375 மில்லியன், மற்றும் இதன் கட்டுமான முயற்சியின் போது கிட்டத்தட்ட 25,000 பேர் இறந்தனர்.

இந்த கால்வாயை டிசம்பர் 31, 1999 வரை அமெரிக்காவால் நிர்வகிக்கப்பட்டது, அந்த நேரத்தில் (ஒப்பந்தத்தின் மூலம்) பனாமா அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டது. பனாமா கால்வாயின் மொத்த நீளம் 50.7 மைல். மேலும் 300 அடி அகலமும் கொண்டது. ஆனால் அதன் ஆழம் இடத்திற்கு இடம் மாறுபடும். இந்த கால்வாயில் மொத்தம் 12 பூட்டுகள் உள்ளன, ஒவ்வொரு அறையிலும் 66 மில்லியன் கேலன் தண்ணீர் உள்ளது. கால்வாயின் பணிகள் முதலில் மே 4, 1904 இல் தொடங்கப்பட்டன. பனாமா கால்வாய் அக்டோபர் 10, 1913 இல் கட்டி முடிக்கப்பட்டது.

அன்று ரூ.70 மாதச் சம்பளம்.. இன்று 1500 கோடி பிசினஸ்.. வசந்த் & கோ சாதனை வரலாறு

ஒரு கப்பல் பனாமா கால்வாய் வழியாக செல்ல சுமார் 8 முதல் 10 மணி நேரம் ஆகும், கப்பல் இப்பகுதிக்கு வரும் போது படிப்படியாக 85 அடி (26 மீ.) உயரத்திற்கு உயர்த்தப்படும். இவ்வாறு கப்பல்கள் கடல் மட்டத்திலிருந்து ஏரிக்கு நீர் மூலம் உயர்த்தப்பட்டு , கால்வாயின் வழியாக பயனிக்கிறது. இயற்கையின் உதவியுடன் இவைகள் செய்யப்படுகின்றன, உயர்த்தப்பட்ட கப்பல்கள் மீண்டும் கடல் மட்டத்திற்குக் குறைக்கப்பட்டு கடலில் விடப்படுகிறது.

Panama 2
panama 2

ஆகஸ்ட் 15, 1914 இல் கால்வாயைக் கடந்த முதல் கப்பல் அன்கான் என்ற சரக்குக் கப்பல் தான் இக்கால்வாயைக் கடந்த பெருமையைப் பெற்றது. மேலும் பனாமா கால்வாய் உலகம் முழுவதும் 160 நாடுகள் மற்றும் 1700 துறைமுகங்களை இணைக்கிறது. சர்வதேச கடல்வழி வர்த்தகம் பனாமா கால்வாயில்தான் நடைபெறுகிறது. ஓர் ஆண்டுக்கு மட்டும் இந்த வழியாகப் பயணம் செய்யும் கப்பல்களின் எண்ணிக்கை 14,000. பனாமா கால்வாயில் மட்டும் ஏதேனும் இடர்பாடுகள் ஏற்பட்டால் அது உலக வர்த்தகத்தையே புரட்டிப் போடும் என்பது உண்மை.

author avatar