Connect with us
Vasanth and co

HISTORY

அன்று ரூ.70 மாதச் சம்பளம்.. இன்று 1500 கோடி பிசினஸ்.. வசந்த் & கோ சாதனை வரலாறு

ஒரு நிறுவனத்தில் சாதராண கணக்காளராகப் பணியில் சேர்ந்து பின்னர் அதிலிருந்து விலகி இன்று எலக்ட்ரானிக் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையில் இமயமாக தனது நிறுவனத்தை உயர்த்தி தொழில் சாம்ராஜ்யத்தை நடத்தியவர்தான் வசந்த குமார். இப்போதும் ஏதாவது ஒரு சேனலில் இவரது விளம்பரம் ஓடிக் கொண்டுதான் இருக்கும். அந்தக் காலம் அது வசந்த் & கோ காலம் என ஒளிபரப்பாகும் விளம்பரமே இவரின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகச் சொல்லிவிடுகிறது. பழைய பிளாக் அன்ட் ஒயிட் டிவி விற்பனையில் ஆரம்பித்த இவரது விற்பனைப் பயணம் இன்று இந்தியா முழுவதும் அனைத்து பிராண்டுகளின் நம்.1 டீலராக விளங்கி சக்கைப் போடு போடுகிறது.

   

இத்தனைக்கும் வசந்தகுமார் வசதியான குடும்பத்தில் பிறந்தவரோ அல்லது நிறைய சொத்துக்கள் உடையவரோ அல்ல. சாதாரண நடுத்தர வர்க்கத்தில் பிறந்தவர்தான். கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தை சொந்த ஊராகக் கொண்ட வசந்தகுமாரின் குடும்பம் தீவிர காங்கிரஸ் பாரம்பரியம் கொண்டது. இவரது அண்ணன்தான் குமரி அனந்தன். குமரி அனந்தனின் மகள் தான்  தமிழிசை சௌந்தரராஜன் என்பது பலருக்கும் தெரியாத தகவல்.

ஆரம்பத்தில் வி.ஜி.பி நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றிய வசந்தகுமார் அந்நிறுவனத்தில் மாதம் 70 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றியுள்ளார். அந்நிறுவனமானது தவணை முறையில் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமாகும். அங்கு இவரது அயராத உழைப்பால் விரைவிலேயே பதவி உயர்வு பெற்று மும்பை கிளையின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் மும்பை செல்வதில் விருப்பமின்றி அந்த நிறுவனத்திலிருந்து விலகினார் வசந்தகுமார்.

சைக்கிள் பயணம்..கிராமத்து வாழ்க்கை.. IT உலகின் ஜாம்பவான் ZOHO ஸ்ரீதர் வேம்புவின் வெற்றிக் கதை

இயல்பாகவே எப்படிப்பட்ட மக்கள் என்றாலும் அவர்களுடன் சகஜமாகப் பழகி அவர்களின் மனதில் தனி இடத்தைப் பிடிப்பது வசந்தகுமாரின் பிறவிக் குணம். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார். வாடிக்கையாளர் சொல்கிற விஷயங்களை உடனுக்குடன் செய்துகொடுப்பார் என்பதால், பலரின் மனதில் விரைவிலேயே இடம்பிடித்துவிட்டார்.

இந்நிலையில் சொந்தமாகத் தொழில் தொடங்க எண்ணி தி.நகர் உஸ்மான் சாலையில் முதன் முதலாக தனக்குத் தெரிந்தவரின் மளிகைக்கடை காலியாவதைக் அறிந்து அந்த இடத்தில் தனது முதல் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையை ஆரம்பித்தார் வசந்தகுமார். இவரின் குணமும், பழகும் விதமும், மேலும் தவணை முறையில் பொருட்களைக் கொடுக்கும் இவரின் புத்திக் கூர்மையும் பொதுமக்கள் மத்தியில் பிரபலமாக வைத்தது.

சைக்கிள் கேரியரில் ஒன்றிரண்டு சேர்களைக் கட்டிக்கொண்டு, சென்னையின் எல்லாத் தெருக்களில் உள்ள வீடுகளின் படிகளையும் ஏறத் தொடங்கினார். வி.ஜி.பி-யில் அறிமுகமான வாடிக்கையாளர்கள் அனைவரின் கதவுகளையும் தட்டினார். பாரி முனையில் இவர் முதன் முதலாக விற்ற பணம் ரூ.22. இதுதான் அவரது முதல் வருமானம். அதன்பின் இம்.எம்.ஐ முறையில் முதன் முதலாக 960 கலர் டிவி வழங்கும் ஆஃபர் கிடைக்கவே அன்று முதல் இந்நிறுவனம் ஏறுமுகமாக மாறியது. தனது புன்சிரிப்பையே நிறுவனத்தின் பிராண்ட் லோகோவாக மாற்றி விளம்பரம் செய்தார்.

Vasanth

#image_title

இதன்பிறகுதான் வசந்த் & கோவின் பிசினஸ் பல்கிப் பெருகத் தொடங்கியது. சென்னையிலும் தமிழகத்தின் பிற நகரங்களில் கிளைகள் திறக்கப்பட்டன. குறிப்பிட்ட அளவு பணத்தை முதலில் தந்து, பொருளை வாங்கி, மீதமுள்ள பணத்தை மாதம்தோறும் கட்டும் இ.எம்.ஐ முறையை நம் மக்கள் நிறையவே விரும்பினார்கள். இதனால் பலரும் இந்த முறையில் டிவி, வாஷிங்மெஷின், ஃப்ரிட்ஜ் போன்ற பொருள்களை வாங்கிக் கொண்டு செல்ல, வசந்த் அண்ட் கோவின் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே வந்தது.

இப்படி உருவான வசந்த் அண்ட் கோ நிறுவனம் இன்று இந்தியாவின் முன்னணி வீட்டு உபயோகப் பொருட்கள் எலக்ட்ரானிக் விற்பனையில் முன்னணியில் இருக்கிறது. மேலும் இந்தியாவின் முதல் பத்து பணக்காரர்களில் இவரது நிறுவனமும் உள்ளது. கடின உழைப்புக்குச் சொந்தக் காரரான வசந்தகுமார் அரசியலிலும் தீவிரமாக இறங்கி கன்னியாகுமரி தொகுதி எம்.பி.ஆக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்க இன்று அவரது மகனும் திரைப்பட நடிகருமான விஜய் வசந்த் தற்போது வசந்த் அன்ட் கோ நிறுவனத்தினை நடத்தி வருகிறார்.

Continue Reading

More in HISTORY

To Top