Connect with us

சைக்கிள் பயணம்..கிராமத்து வாழ்க்கை.. IT உலகின் ஜாம்பவான் ZOHO ஸ்ரீதர் வேம்புவின் வெற்றிக் கதை

Zoho

TRENDING

சைக்கிள் பயணம்..கிராமத்து வாழ்க்கை.. IT உலகின் ஜாம்பவான் ZOHO ஸ்ரீதர் வேம்புவின் வெற்றிக் கதை

சாதாரண வேட்டி சட்டை கட்டிக் கொண்டு, கிராமத்தில் சைக்கிளில் வலம் வந்து கொண்டு எளிய வாழ்க்கை வாழும் ஒரு ஸ்ரீதர் வேம்பு எனும் ஐடி ஜாம்பவானின் வெற்றிக் கதைதான் இது. மாதம 30,000 சம்பாதித்து விட்டாலே ஆடம்பரங்களிலும், ஐஎம்ஐகளிலும் அடிமையாகும் இளைஞர்களுக்கு மத்தியில் வருடத்திற்கு 4500 கோடி வர்த்தகம் செய்து உலகம் முழுவதும் ஐடி தொழிலில் தனி சாம்ராஜ்யமே நடத்தி வருகிறார் ஸ்ரீ தர் வேம்பு.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்தான் ஸ்ரீதர் வேம்பு. தனது கல்லூரிப் படிப்பை சென்னை ஐஐடியில் படித்தார். கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு ஆய்வுப் படிப்பிற்காக அமெரிக்கா சென்றார். நியூ ஜெர்சியில் உள்ள ஃபிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் 1989ஆம் ஆண்டு மின் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

பின் கலிபோர்னியாவில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி பின் தனது சகோதரருடன் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றை 1994-ல் தொடங்கினார். இவரது தொழில் திறமையால் மென்பொருள் துறையில்  குறுகிய காலத்திலேயே அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் உள்ள நிறுவனங்களும் மற்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு இவருக்கு வாடிக்கையாளர்களாக மாறின.

   
Zoho

#image_title

 

2000 ஆண்டுவாக்கில் மில்லியனில் வர்த்தகம் செய்யும் அளவிற்கு அசுர வளர்ச்சி அடைந்தது இவர் நிறுவனம். அட்வென்ட்நெட் என்று பெயரிடப்பட்ட இவரது நிறுவனம் 2009-க்குப் பிறகு ZOHO CORPORATION என்று பெயர் மாற்றம் கண்டது. 2015ஆம் ஆண்டில் அசுர வளர்ச்சி கண்டு இந்நிறுவனத்தின் பயனாளர்கள் எண்ணிக்கை 1.2 கோடியாக உயர்ந்தது. அந்த ஆண்டில் 30 கோடி டாலர் வருவாய் ஈட்டுமளவுக்கு ஜோஹோ நிறுவனம் வளர்ச்சி கண்டது.

சபாஷ்.. இது தான் டா வளர்ச்சி.. காமெடியனாக நடித்த முன்னணி நடிகருடன் ஹீரோவாக களம் இறங்கும் சந்தானம்..

தகவல் தொழில்நுட்பத்துறையின் அசுரனாகத் திகழும் ஜோஹோ சென்னையை மையமாகக் கொண்டு  இயங்கி வருகிறது. உலகம் முழுவதும் இதன் சேவைகள் விரிந்து தற்போது ஆண்டுக்கு 4,380 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுகிறது.

இன்று சாப்ட்வேர் துறையில் நுழையும் இளைஞர்களுக்கு Zoho நிறுவனத்தில் வேலை பார்ப்பது என்பது கனவு. ஏனெனில், அந்த அளவு சுதந்திரம் ஊழியர்களுக்கு இந்நிறுவனம் அளித்துள்ளது.

Zoho 1

#image_title

ஆனால் இவற்றில் உச்சம் எதுவென்றால் ZOHOவின் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கும் ஸ்ரீதர் வேம்புவுக்கு அலுவலகத்தில் அவருக்கென்று தனி கேபின் என்றெல்லாம் கிடையாது. சாதாரணமாய் அனைவரிடமும் கலந்து உரையாடுவார். வேலை செய்யும் அனைவரின் கேள்விகளுக்கும் பதில் அளிப்பார்.

இயற்கை வாழ்வில் நாட்டம் கொண்ட ஸ்ரீதர் வேம்பு கொரோனா ஊரடங்கிற்குப் பின் அதன் தலைமையகத்தை, 2019ஆம் ஆண்டு அக்டோபரில், தென்காசிக்குப் பக்கம் இருக்கும் “மத்தளம்பாறை” என்னும் தன் கிராமத்துக்குக் கொண்டு வந்து விட்டார் இந்த மகா மனிதர். தனக்கு இந்த பகட்டு, ஆடம்பரம் எதுவும் வேண்டாம் கிராமத்தில் சாதாரண விவசாய மக்களோடு இயற்கை வாழ்வு வாழ்ந்து வருகிறார். மேலும் கிராமத்தையும் தத்தெடுத்து பல அடிப்படை வசதிகளைச் செய்து தந்திருக்கிறார்.

Continue Reading
To Top