Connect with us

HISTORY

அப்பா 8 அடின்னா, பையன் 16 அடி பாய்வார் போல.. 1,97 ஆயிரம் கோடி பிசினஸை நடத்தும் இளைஞர்.. யார் இந்த வருண் ஜெயப்பூரியா..!

இந்தியாவில் முன்னணி வர்த்தக நிறுவனங்களின் நடத்தும் தலைவர்கள் அடுத்தடுத்து தங்களது வாரிசுகளின் கைகளுக்கு மாற்றி விடுவது வழக்கம்தான். இந்தியாவில் உள்ள அனைத்து பெப்சிகோ கம்பெனிகளுக்கும் தேவையான பாட்டில்களை தயாரித்து வழங்கி வருகின்றது வரும் வருண் பிவரேஜஸ் கம்பெனி அமெரிக்காவுக்கு வெளியே பெப்சிகோ சாஃப்ட்ரிங் கம்பெனியின் இரண்டாவது பெரிய பாட்டிலின் கம்பெனியாக இருக்கிறது.

   

வருண் பேவரேஜ் நிறுவனம் எவ்வளவு பாட்டில்கள் வேண்டும் என்றாலும் உடனடியாக அதனை தயாரித்துக் கொடுக்கும் அளவுகள் பேக்டரி வசதிகளை வைத்துள்ளது. இந்திய கோலா மன்னன் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் ரவிகாந்த் ஜெய்பூரியா மார்வாடி குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அமெரிக்காவில் பிசினஸ் மேனேஜ்மெண்ட் படித்துவிட்டு 1985 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு திரும்பிய இவர் குடும்பத் தொழிலான பெப்சிகோ பாட்டில் தயாரிப்பில் இணைந்தார்.

ஆர்ஜே குரூப் குரூப்ஸ் நிறுவனத்தின் தலைவரான ரவி காந்தி ஜெய்பூரியா சொத்து மதிப்பு 2023 ஆம் ஆண்டு வரை 6 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இவரது மகன் வருண் ஜெய்பூரியா படிப்பை முடித்துவிட்டு தந்தையின் கம்பெனிக்கு வந்து 10 வருடத்திற்கு மேலாக வணிகத்தில் ஈடுபட்டார். சிறிய பதவி மற்றும் பொறுப்புகளில் இருந்து படிப்படியாக வர்த்தகத்தை கற்று தற்போது பெப்சி, 7UP, மிரிண்டா மற்றும் மவுண்டன் டியூ ஃபிஸி பானங்கள், ஸ்டிங் எனர்ஜி டிரிங், டிராபிகானா ஜூஸ் மற்றும் அக்வாஃபினா வாட்டர் மற்றும் உணவு வர்த்தகத்தை கவனித்து வருகிறார்.

அதேபோல் ரவிகாந்த் ஜெய்பூரியா மகளான தேவயானி கல்வி மற்றும் மருத்துவத்துறைகளின் பொறுப்பை ஏற்று நடத்தி . இவர் பிரீமியம் மகப்பேறு மருத்துவமனை இன்டர்நேஷனல் ஸ்கூல் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களை நிர்வகித்து வருகின்றார். லண்டனில் பிசினஸ் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு திரும்பிய வருண் 2009 முதல் வருண் பேவரைட் லிமிடெட் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த ஆண்டு முதல் முழு நிர்வாகத்தையும் தனது கையில் எடுத்த வருண் தொடர்ந்து பிசினஸில் மிகப்பெரிய அளவு சாதனை படைத்து வருகின்றார். உலக அளவில் 3.8 மில்லியன் விற்பனை நிலையங்களுக்கு வரும் வருண் பிவரேஜஸ் லிமிடெட் நிறுவனத்திலிருந்து பல பொருட்கள் சென்றடைகின்றது.

அதுமட்டுமில்லாமல் ஒன்பது நாடுகளில் செயல்பட்டு வரும் வருண் பிவரேஜஸ் லிமிடெட் 30 ஆண்டுகளுக்கு முன்பு பெப்சிகோ இந்தியாவுடன் வர்த்தகக் கூட்டணியை தொடங்கியது. தற்போது வருண் ஜெயப்பூரியா ஒரு லட்சத்து 97 ஆயிரம் கோடி மதிப்புள்ள பிசினஸ்களை மிகவும் திறமையாக கவனித்து வருகிறார்.

author avatar
Mahalakshmi
Continue Reading

More in HISTORY

To Top