Connect with us

HISTORY

தன்னுடைய ஆசை ராணிக்காக ஊருக்கே பெயின்ட் அடித்த ராஜபுத்திர அரசர்! ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு நிகரான காதலா இருக்கும் போலயே!

முகலாய வம்சத்தின் 5 ஆவது பேரரசராக பதவியேற்ற ஷாஜகான், தான் இளவயதில் இருந்து காதலித்து வந்த மும்தாஜ்ஜை தனது மனைவிகளுள் ஒருவராக ஆக்கிக்கொண்டார். அவரது அந்தபுரத்தில் பல மனைவிகள் இருந்தும் மும்தாஜின் மேல் அதிகளவு காதல் வைத்திருந்தார்.

ஒரு நாள் மும்தாஜ் உடல் நிலை சரியில்லாமல் இறந்துபோக ஷாஜகான் நொந்துப்போனார். கிட்டத்தட்ட பல நாட்களாக தனது அறையில் தனிமையிலேயே கழித்தார் அவர். தண்ணீர் கூட அருந்தாமல் மும்தாஜை நினைத்துக்கொண்டு ஸ்தம்பித்தபடியே இருந்தாராம். கடைசி வரை அவரால் மும்தாஜ்ஜின் நினைவுகளில் இருந்து மீள முடியவில்லை.

   

தன்னுடைய காதலியின் நினைவிற்காக மிகப் பெரிய பொருட்செலவில் ஒரு நினைவிடத்தை எழுப்ப வேண்டும் என முடிவு செய்து அவர் கட்டிய நினைவிடம்தான் தாஜ் மஹால். ஷாஜகான் எப்படி தனது காதலிக்காக மிகப் பெரிய நினைவிடம் ஒன்றை கட்டினாரோ, அதே போல் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் பகுதியை ஆண்ட ஒரு ராஜா தனது ஆசை மனைவிக்காக ஊருக்கே வண்ணத்தை பூசியிருக்கிறார்.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் பகுதியை இரண்டாம் ராம் சிங் என்ற ராஜபுத்திர மன்னர் ஆண்டு வந்தார். 1870களில் வேல்ஸ் இளவரசர் அல்பர்ட் எட்வர்ட் என்பவர் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்த சமயத்தில் அவர் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரத்திற்கும் வருகை தருவதாக இருந்தது.

அவரை கவர்வதற்காக இரண்டாம் ராம் சிங் அவரை வித்தியாசமான முறையில் வரவேற்கவேண்டும் என திட்டமிட்டார். அந்த சமயத்தில் தனது ஆசை ராணிக்கு இளஞ்சிவப்பு நிறம் (பிங்க்) மிகவும் பிடிக்கும் என்பதை அறிந்துகொண்ட மன்னர், ஜெய்ப்பூர் முழுவதிலும் உள்ள கட்டடங்களுக்கு பிங்க் நிற வண்ணத்தை பூசச் சொல்லி கட்டளை இட்டாராம். மேலும் பிங்க் நிறம் தவிர வேறு நிறத்தை கட்டடங்களுக்கு பூசுவது விதிமீறல் எனவும் அறிவித்தாராம். அதன் பின் ஜெய்பூரில் உள்ள கட்டடங்கள் அனைத்தும் இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சித் தந்தன.

இதற்காக அந்த பகுதியில் இருந்த கனோட்டா என்ற இடத்தில் அமைந்திருந்த மலையில் இருந்து கற்கள் வெட்டியெடுக்கப்பட்டன. அந்த கற்களை கரைத்து கால்சியம் ஆக்சைடு கலக்கப்பட்டதாம். அவ்வாறுதான் ஜெய்ப்பூர் “Pink City” ஆனதாக கூறுகின்றனர்.

Continue Reading

More in HISTORY

To Top