Nitrozen

சாதா ஏர் vs நைட்ரஜன் ஏர்.. டயர் காற்று அடிக்கிறதுல இவ்வளவு விஷயம் இருக்கா?

By John on பிப்ரவரி 8, 2024

Spread the love

சாதாரணமாக நாம் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பி விட்டு பின்னர் டயர்களில் ஏர் செக் செய்வது வழக்கம். அவ்வாறு நாம் ஏர் செக் செய்யும் போது ஏர் நிரப்பியானது இரண்டு வகைகளில் இருக்கும் ஒன்று சாதாராண காற்று. மற்றொன்று நைட்ரஜன் நிரப்பப்பட்ட குழாய். பெரும்பாலும் டூ வீலர்களுக்கு சாதாரண காற்றைத் தான் நிரப்புவார்கள். ஆனால் கார்களுக்கு நைட்ரஜன் வாயு நிரப்புவதைப் பார்த்திருக்கிறோம். ஏன் நைட்ரஜன் வாயு நிரப்பப்படுகிறது? சாதாரண காற்றுக்கும் நைட்ரஜன் வாயு நிரப்புவதற்கும் உள்ள வித்தியாசங்களைப் பார்ப்போம்.

சாதாரண காற்றிற்கும் நைட்ரஜன் காற்றிற்கும் சிறிது அளவே வித்தியாசம் உள்ளது. சாதாரண காற்றில் 78% சதவீத நைட்ரஜன், 21 சதவீத ஆக்ஸிஜன், மற்றம் 1 சதவீதம் இதர காற்று இருக்கும். ஆனால் சாதாரண காற்றுடன் ஒப்பிடும்போது, ​​நைட்ரஜன் கார் டயர்களின் ஆயுளை அதிகரிக்கிறது. சாதாரண காற்றை விட இந்த நைட்ரஜன் காற்றை உயர்த்துவதன் ஒரு நன்மை என்னவென்றால், டயர் அதிக வெப்பத்தை உருவாக்கினால், இந்த காற்று வெப்பநிலையைக் குறைக்க உதவும்.

   
Nitrozen

#image_title

   

இதுமட்டுமின்றி ரேஸ் பைக்குகளில் நைட்ரஜன் வாயுவே நிரப்பப்படுகிறது. ஏனெனில் அது ஸ்திரத் தன்மையை அதிகரிக்கிறது. சாதாரண காற்றில் உள்ள 28 சதவீதமும் 1 சதவீத காற்றும் அதிக சூடு மற்றும் பல்வேறு காரணங்களுக்காக வெளியே வாய்புள்ளது. இதனால் டயரில் உள்ள பிரஷர் குறையும். ஆனால் நைட்ரஜன் ஏர் அடைக்கப்படுவதால் டயர் ஏர் பிரஷர் குறைப்பது குறைவு.

 

சைக்கிள் பயணம்..கிராமத்து வாழ்க்கை.. IT உலகின் ஜாம்பவான் ZOHO ஸ்ரீதர் வேம்புவின் வெற்றிக் கதை

முழுமையாக நைட்ரஜன் ஏர் இருப்பதால் அது இரும்புடன் சேர்ந்து ரியாக் ஆகாமல் இருக்கும். இதனால் துரு பிடித்தல் பயம் கிடையாது. ஆனால் சாதாரண காற்றில் உள்ள ஆக்ஸிஜன் ரிம்மில் உள்ள இரும்பு ஈரமாகும் சமயங்களில் டியூப்பையும் தாண்டி ரிம்மில் உள்ள இரும்புடன் ரியாக்ட் ஆகி விரைவில் துரு பிடிக்கும் வாய்ப்புள்ளது.

Car

#image_title

முக்கியமாக நைட்ரஜன் காற்று முழுமையாக இருந்தால் பஞ்சர் ஏற்பட்டாலும் காற்று வெளியேற சாதாரண டயரை விட சற்று அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். இதனால் டயரின் வாழ்நாள் என்பது அதிகரிக்கும். மேலும் சிறந்த மைலேஜிற்கும் நைட்ரஜன் ஏர் மிகவும் உதவுகிறது. ஆனால் ஒன்றே ஒன்று வழக்கமான காற்று இலவசமாக நிரப்பிக் கொள்ளலாம். நைட்ரஜன் ஏர் பிடிக்க 10,20 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.