Connect with us
ooty

LIFESTYLE

ஊட்டி மலை ரயிலுக்கு மட்டும் ஏன் இந்த இருப்புப் பாதை..? வியக்க வைக்கும் ஜில் தகவல்கள்

போக்குவரத்தில் ஏழைகளின் சிறந்த பயணமாகக் கருதப்படுவது ரயில் பயணம் ஆகும். எந்த ஒரு அலுப்பும் இல்லாமல் மிகக் குறைந்த கட்டணத்தில் ஓர் ஊரில் இருந்து மற்றோர் ஊர் செல்வதற்கு உலகெங்கிலும் உள்ள மக்களை சுமந்து செல்கிறது ரயில். இந்தியாவில் பல பாரம்பரியம்  மிக்க ரயில் பயணங்கள் உள்ளன. இவற்றில் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 111 ஆண்டுகளுக்கும் மேலாக அதுவும் மலைப்பகுதியில் இயக்கப்பட்டு வருகிறது ஊட்டி மலை ரயில்.

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியாகத் திகழும் நீலகிரி மலைப்பகுதியான ஊட்டிக்கு பேருந்து, கார்களில் செல்வதைக் காட்டிலும் ரயிலில் பயணம் செய்வதையே அதிகம் சுற்றுலாப் பயணிகள் விரும்புவர். ஏனெனில் மலையைக் குடைந்து போடப்பட்ட இருப்புப் பாதைகள், ஆங்காங்கே சிற்றருவிகள், திடீர் பயமுறுத்தும் குகைகள், ஜன்னல் வழி இதமான குளிர் காற்று என மலை ரயிலில் பயணம் செய்யும் அந்த அனுபவமே தனி சுகம் தான். இப்படிப்பட்ட ரயில் எப்போது ஆரம்பிக்கப்பட்டது அதன் வரலாறு தெரியுமா?

   
ooty

#image_title

நீலகிரி மலை ரயில் போக்குவரத்து (Nilgiri Mountain Railway) 1,000 மில்லிமீட்டர் (3 அடி 3 3⁄8 அங்குலம்) அளவு கொண்ட குறுகியப் பாதை வகை இரயில் போக்குவரத்து ஆகும். 1908 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இப்பாதையை உருவாக்கினார்கள். தெற்கு இரயில்வே இப்பாதையில் இரயில்களை இயக்குகிறது. இந்தியாவிலுள்ள ஒரே பற்சக்கர இருப்புப்பாதை தொடர்வண்டி நீலகிரி மலை ரயில் மட்டுமேயாகும்.

மீண்டும் நேருக்கு நேர் மோதப்போகும் இரு மலைகள்.. ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் வேட்டையன் & GOAT.. வெயிட்டிங்கே வெறியேறுதே..

நீராவி இரயில் இயந்திரத்தை நம்பியே இந்த மலை இரயில் இயங்குகிறது. குன்னூரிலிருந்து உதகமண்டலம் வரையுள்ள பாதையில் மட்டும் இந்த இரயில் டீசல் இயந்திரத்திற்கு மாற்றப்பட்டு இயங்குகிறது . உள்ளூர் மக்களும் சுற்றுலா பயணிகளும் இந்தப் பாதையில் நீராவி இயந்திரத்தையே இயக்க வேண்டுமென ஒரு பிரச்சார இயக்கத்தை நடத்தினர். சூலை 2005 இல் டாரிஜிலிங் இமாலயன் இரயில்வேயுடன் நீலகிரி மலை இரயில்வேவையும் ஓர் உலக பாரம்பரியக் களமாக யுனெசுகோவின் உலக பாரம்பரிய குழு நீட்டித்தது.

ooty

#image_title

ஆங்கிலேயர்கள் 1854 ஆம் ஆண்டு மேட்டுப்பாளையத்திலிருந்து நீலகிரி மலை வரை ஒரு மலைப்பாதையை அமைக்கத் திட்டமிட்டனர். இருந்த போதிலும் கிடப்பில் போடப்பட்டு பின்னர் இத்திட்டத்தை முடிக்க 45 ஆண்டுகள் பிடித்தன. ஒருவழியாக ஜுன் 1899 ஆம் ஆண்டு இப்பாதை போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டது. முதலில் சென்னை இரயில்வே அரசாங்கத்துடன் மேற்கொண்ட ஓர் உடன்பாடு காரணமாக இந்த இரயிலை இயக்கியது. இறுதியாக தென் இந்திய இரயில்வே நிறுவனம் நீலகிரி மலை இரயில்வேயை வாங்கி இயக்கத் தொடங்கியது.

தொடக்கத்தில் இப்பாதையின் இறுதி இரயில் நிலையம் குன்னூராக இருந்தது. பின் 1908 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெர்ன்கில் இரயில் நிலையம் வரை இரயில் நீட்டிக்கப்பட்டது. அதே ஆண்டு அக்டோபர் மாதம் இப்பாதை மேலும் உதகமண்டலம் இரயில் நிலையம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.

ooty

#image_title

மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் வரையிலான மலைப்பாதையைக் கடக்க நீலகிரி மலை இரயில் பற்சட்டம் மற்றும் பற்சக்கரங்களால் இயங்கும் நீராவி இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இவ்வகை பற்சக்கரப் பாதை இந்தியாவில் இங்கு மட்டுமே உள்ளது.

மலையின் மேல்நோக்கிய பயணம் நீலகிரி மலை இரயிலில் சுமார் 290 நிமிடங்கள் (4.8 மணி நேரம்) பிடிக்கிறது. இதே பாதையில் கீழ்நோக்கி வரும் பயணம் 215 நிமிடங்கள் (3.6 மணி நேரம்) ஆகிறது. இது ஆசியாவில் மிகக் கடுமையான சரிவு பாதையாகக் கருதப்படுகிறது. மொத்த தூரமான 45.8 கிலோமீட்டரில் (28 மைல்), 108 வளைவுகள், 16 சுரங்கங்கள் மற்றும் 250 பாலங்கள் ஆகியவற்றை சுற்றுலாப் பயணிகள் கடந்து செல்லும் இனிய அனுபவத்தை வழங்குகிறது.

Continue Reading

More in LIFESTYLE

To Top