Connect with us
Alibaba 4

LIFESTYLE

தோல்வி மேல் தோல்வி.. ஆன்லைன் ஷாப்பிங் உலகின் அரசனாக திகழும் Alibaba. com உருவான வரலாறு..

இன்று இணைய வர்த்தக உலகை அமேசான், பிளிப்கார்ட், மீசோ என எண்ணற்ற நிறுவனங்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாலும், இன்றும் சீனாவில் முதன்மையாகவும் உலகம் முழுவதும் பிரபலமாக விளங்கக்கூடிய ஒரு ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் தான் அலிபாபா.காம். குண்டூசி முதல் கப்பல் வரை அனைத்துப் பொருட்களும் இங்கு அடக்கம். இணையம் வழியாக உலகின் மிகப்பெரிய ஷாப்பிங் சாம்ராஜ்யத்தையே உருவாக்கிய அலிபாபாவின் உருவானது இப்படித்தான்.

அலிபாபா.காம் நிறுவனத்தை உருவாக்கியவர் சீனாவைச் சேர்ந்த ஜாக்மா. ஆசிரியர், சுற்றுலா கைடு என 30க்கும் மேற்பட்ட வேலைகளைச் செய்தவருக்கு எதுவுமே நிரந்தரமாக அமையவில்லை. ஜாக் சற்று குள்ளம். மிகவும் ஒல்லியான தேகம். இதனால் பிறர் ஏளனம் செய்து தாழ்வுமனப்பான்மை வளர்ந்தது. இருந்தாலும் போராடும் குணம் அவரிடம் இயல்பாகவே இருந்தது. இணையம் வளர ஆரம்பித்த 1996இல் நண்பர்களுடன் அமெரிக்காவிற்கு சென்றிருக்கிறார். அங்குதான் இணையம் பற்றி அவருக்கு தெரிய வருகிறது. தேடுபொறியில் எதையாவது தேடிப் பார்ப்போமென்று ’பீர்’ என்று டைப் பண்ணினால் எல்லா நாட்டு பீர்களும் வந்திருக்கின்றன. சீனாவைத் தவிர.

   
Alibaba

#image_title

கண்ணைக் கட்டும் கட்டுமானம்.. விஷ்ணு கோவில் புத்த தலமாக மாறிய வரலாறு.. உலகின் மிகப்பெரிய கோவில் அங்கோர்வாட் அதிசயங்கள்..

கணினி நிரல் மொழிகள் குறித்த அறிவு எதுவும் இல்லாமலே 1990களில், நண்பர்களின் உதவியோடு அலிபாபா பலவ தோல்விகளுக்குப் பிறகு அலிபாபா.காம் என்ற ஆன்லைன் வர்த்தக இணையதளத்தை உருவாக்கினார் ஜாக்மா.

இந்த அலிபாபா என்ற பெயர் வந்தது சற்று சுவாரஸ்யமான தருணம். ஒருமுறை என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிக்கும் போது அரேபியாவின் ஆயிரத்தொரு இரவுகள் கதைகளில் வரும் அலிபாபா ஞாபகம் வருகிறது. நல்ல பெயராக இருக்கிறதே என்று யோசிக்கிறார். அவரின் டேபிளுக்கு உணவு கொண்டுவந்த பணிப்பெண்ணிடம் உனக்கு அலிபாபா பெயர் தெரியுமா என்று கேட்கிறார். ’ஓ தெரியுமே.. திறந்திடு சீசேம் என்று சொல்வாரே அவர் தானே’ என்கிறார். ஜாக்மாவிற்கு நம்பிக்கை பிறக்கிறது. இதையே தனது இணையத்தின் பெயராக மாற்றினார்.

Alibaba3

#image_title

அதன்பின் மளமளவென அலிபாபா நிறுவனம் இன்று உலக வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அலிபாபாவின் நுகர்பொருள் வர்த்தகம் அமேசான், ஈபே இரண்டையும் சேர்த்தாலும் அதிகம். இன்று அலிபே, டோபோ, டிமால், அலிஎக்ஸ்பிரஸ் என்று பல கிளைநிறுவனங்களோடு மிக உறுதியாக வளர்ந்துகொண்டு வருகிறது. 2017ஆம் ஆண்டுக்கான ஃபோர்ப்ஸ் இதழின் உலக பணக்காரர்கள் பட்டியலின்படி ஜாக் மா சீனாவின் மூன்றாவது பெரிய பணக்காரர்.

தனது ஸ்மார்ட்டான ஐடியாவால் இன்று உலகப் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் உள்ள ஜாக்மாவின் உழைப்பு என்பது ஸ்மார்டானது. திறமை ஒன்றையே மூலதனமாக வைத்து இன்று இணைய உலகின் அரசனாகத் திகழ்கிறார் அலிபாபா நிறுவனர் ஜாக்மா.

author avatar
Continue Reading

More in LIFESTYLE

To Top