Connect with us
angorwat

HISTORY

கண்ணைக் கட்டும் கட்டுமானம்.. விஷ்ணு கோவில் புத்த தலமாக மாறிய வரலாறு.. உலகின் மிகப்பெரிய கோவில் அங்கோர்வாட் அதிசயங்கள்..

உலகில் ஏழு அதிசயங்கள் உள்ளன என்று நாம் படித்தருப்போம். ஆனால் உலகின் 8-வது அதிசயமாக தற்போது திகழ்ந்து வருகிறது அங்கோர்வாட் ஆலயம். இந்துக்கள் அதிகம் வாழும் நாடான கம்போடியாவில் கிட்டத்தட்ட 900 வருடங்களுக்கு முன் கட்டப்பட் ஆலயம் இன்று உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது.

அப்படி என்ன இருக்கு இந்த கோவிலில் தெரியுமா? இந்திய கெமர் மன்னர் இரண்டாம் சூர்யவர்மனால் ஆரம்பத்தில் விஷ்ணு ஆலயமாகக் கட்டப்பட்டு பின்னர் சூரியவர்மன் இறந்த பிறகு ஆட்சிக்கு வந்த ஏழாம் ஜெயவர்மன் இதை புத்த மதக் கோயிலாக மாற்றினார்.

   

கெமர், திராவிடக் கலைகளைக் கொண்டு கட்டப்பட்டிருப்பதால் கம்போடிய அரசின் தேசியக் கொடியில் தேசியச் சின்னமாகப் பொறிக்கப்பட்டுள்ளது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். கம்போடியாவின் முக்கிய வருவாயே இக்கோவிலை நம்பித்தான் இருக்கிறதாகத் தகவல்கள் உண்டு. அவ்வளவு சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த புராதனச் சின்னமாக உள்ளது அங்கோர்வாட் கோவில்.

angor

#image_title

கோண முகம்.. இந்த மூஞ்சியெல்லாம் ஹீரோவா..? அவமானங்களை அடித்து உடைத்து ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன சில்வஸ்டர் ஸ்டாலன்

பதினெட்டாம் நூற்றாண்டில் கம்போடியா பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த போது பிரான்சை சேர்ந்த சில ஆராய்ச்சியாளர்கள், காட்டுச் செடிகளை ஆராய்ச்சி செய்ய வனத்துக்குள் சென்றபோது திடீரென்று தென்பட்டது தான் இந்த பிரம்மாண்ட கோவில்!

முதலில் இந்த கோவில் மட்டுமே அதிசயமாக கருதப்பட்டது ! காரணம் அதன் விஸ்தீரணம் 402 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மிகப் பெரிய கோவில் இது!

Angor 1

#image_title

இந்தக் கோயிலின் ஒரு பக்கச் சுற்றுச் சுவரின் நீளம் மட்டும் சுமார் மூன்றரை கிலோமீட்டர். இந்தக் கோயிலுக்குள் நம் தமிழகத்து ஸ்ரீரங்கம் கோயிலைப் போன்று 20 கோயில்களை அடைக்கலாம். இந்த கோவில் எவ்வளவு பெரியது எனில் பூமியிலிருந்து 20,000 மீ உயரம் மேலே சென்று படம்பிடித்தால்தான் இதை முழுமையாக படம்பிடிக்க முடியும்.

இந்த கோயிலின் நான்கு பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை. 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும்.

சம்பாதிச்சத எல்லாம் வள்ளல் போல செலவளித்த NSK. பிள்ளைகளுக்கு சேத்துவைக்க சொன்ன நண்பருக்கு சொன்ன குட்டிக் கதை

இக்கோயிலை மேலிருந்து பார்க்கும்போது மூன்று அடுக்குகளாகத் தோற்றமளிக்கிறது. முதல் அடுக்கில் உள்ள சுவரில் ராமாயணம், மகாபாரதக் காட்சிகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டாம் அடுக்கின் நான்கு திசைகளிலும் பெரிய சதுர வடிவத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.

angor 4

#image_title

மூன்றாம் அடுக்கில் விண்ணை நோக்கி உயர்ந்துள்ள ஐந்து கோபுரங்களாகக் காட்சி தருகிறது. மேலும், இக்கோயிலுக்கு மிகப் பெரிய நான்கு நுழைவு வாயில்களும் உள்ளன. உலகிலேயே மிகப் பெரிய கலைவடிவமாகக் கருதப்படும் இக்கோயிலை பார்க்க, ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கில் மக்கள் வருகிறார்கள்.1992-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு அங்கோர் வாட்டை உலக மரபுச் சின்னமாக அறிவித்ததுடன், அதிகம் சிதைவுறாமல் பராமரித்தும் வருகிறது.

உலகிலேயே மிகப் பெரிய கலைவடிவமாகக் கருதப்படும் இக்கோயிலை பார்க்க, ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கில் மக்கள் வருகிறார்கள்.

Continue Reading

More in HISTORY

To Top